பெரியாழ்வார் ஆனி சுவாதி திருவிழா


பெரியாழ்வார் ஆனி சுவாதி திருவிழா
x

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் ஆனி சுவாதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் ஆனி சுவாதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றம்

ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ பெரியாழ்வார் சன்னதியில் பெரியாழ்வார் சுவாதி திருவிழா சிறப்பாக நடைபெறும்.

அதேபோல இந்த ஆண்டு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா 10-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து தினமும் பெரியாழ்வார் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பதுடன், வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

சர்வ அலங்காரம்

கொடியேற்றத்தை முன்னிட்டு பெரியாழ்வார் சன்னதியில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பெரியாழ்வார் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

முன்னதாக கொடிபட்டத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கொடியேற்றத்திற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story