வேளுக்குடி ருத்ர கோடீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு


வேளுக்குடி ருத்ர கோடீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
x

வேளுக்குடி ருத்ர கோடீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

திருவாரூர்

கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடியில் பழமை வாய்ந்த ருத்ர கோடீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் சிவபெருமான், நந்தி பகவானுக்கு 108 லிட்டர் பால் மற்றும் தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேேபால் திருமக்கோட்டை ஞானபுரீஸ்வரர் ேகாவிலில் பிரதோஷத்தையொட்டி நந்திக்கும், ஞானபுரீஸ்வரருக்கும் பால், பன்னீர், சந்தனம், இளநீர், திரவியபொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


Next Story