பாலதண்டாயுதபாணி கோவிலில் செண்பகப்பூ உற்சவம்


பாலதண்டாயுதபாணி கோவிலில் செண்பகப்பூ உற்சவம்
x

பாலதண்டாயுதபாணி கோவிலில் செண்பகப்பூ உற்சவம்

திருவாரூர்

சிவபெருமானுக்கு பிள்ளைக் கறி சமைத்துக் கொடுத்து தனது பக்தியை வெளிப்படுத்திய சிறுதொண்ட நாயனாரின் பக்தியை மெட்சிய சிவபெருமானிடம் வரம் கேட்ட சிறுதொண்டர் தனக்கு உதவி செய்த வாதாபி கொண்டான் எனும் பெயர் பெற்ற நரசிம்மவர்மனுக்கு வரம் அருள வேண்டுமென கேட்டார். அதற்கு சிவபெருமான் தனது மகனையே கறி சமைத்து பக்தியை வெளிப்படுத்திய சிறுத்தொண்டர் முக்தி அடைந்த நாள்முதல் 21-வது நாள் திருவோண நட்சத்திரத்தில் வாதாபி கொண்டான் எனும் நரசிம்மவர்மன் மோட்சம் பெற்ற நாள் செண்பகப்பூ உற்சவமாக கொண்டாடப்படும் என வரம் அளித்தார் சிவபெருமான். அதன்படி நேற்று இரவு மன்னார்குடி அருகே மேலதிருப்பாலக்குடி கிராமத்தில் உள்ள பால தண்டாயுதபாணி கோவிலில் செண்பகப்பூ உற்சவம் நடைபெற்றது. அப்போது உத்ராபதீஸ்வரர் ரிஷப வாகனத்தில் செண்பகப்பூ அலங்காரத்தில் எழுந்தருளினார். திருப்பாலக்குடி கிராமத்தில் பல்வேறு வீதிகள் வழியாக வலம் வந்த சாமியை பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

1 More update

Next Story