நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு


நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு
x

நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி சீதா, லட்சுமணன், சந்தானராமர், விஸ்வக்சேனர் ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி வீர ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. திருவோணமங்கலம் ஞானபுரியில் உள்ள சங்கடஹர மங்களமாருதி ஆஞ்சநேயர், ஆலங்குடி அபயவரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story