ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு


ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு

தஞ்சாவூர்

திருச்சிற்றம்பலம்

கும்பகோணம், பட்டுக்கோட்டை பகுதிகளில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருச்சிற்றம்பலம்

ஆடிமாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று திருச்சிற்றம்பலத்தில் அமைந்துள்ள புராதனவனேஸ்வரர் கோவிலில் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

தொடர்ந்து திருச்சிற்றம்பலத்தில் அமைந்துள்ள முகப்பு மண்டபத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி பெரியநாயகி அம்மனை வழிபாடு செய்தனர்.

இதேபோல் திருச்சிற்றம்பலம் பெரியான் தெரு, களத்தூர், ஆவணம், புனல்வாசல் ஆகிய இடங்களில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இ்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருச்சிற்றம்பலம் அருகே உள்ள பாலத்தளி துர்க்கை அம்மன் கோவிலில் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பக்தர்களின் வசதிக்காக பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதியில் இருந்து அரசின் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. செருவாவிடுதியில் உள்ள போத்தி அம்மன் கோவிலிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

அதிராம்பட்டினம்

அதிராம்பட்டினம் சுப்பிரமணியர் கோவில் தெருவில் உள்ள திருமையா கோவிலில் ஆடி கடைசி வெள்ளி உற்சவ திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று திருமையா சாமிக்கு அலங்கார பூஜைகள் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் அதிராம்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட அம்மன் கோவில்கள் மற்றும் மகிழாங்கோட்டை, புதுக்கோட்டை உள்ளூர், தொக்காலிக்காடு, மழவேனீர்காடு, சுந்தரநாயகிபுரம், சேண்டாக்கோட்டை, முதல்சேரி ஆகிய ஊராட்சிகளில் அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பாபநாசம்

பாபநாசம் கஞ்சிமேடு கிராமத்தில் உள்ள செல்வமகாகாளியம்மன் கோவிலில் ஆடி மாத பால்குடம், காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று மேலவீதி குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து சக்திகரகம், செடில் காவடி, பால்குடம் ஆகியவற்றை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பாபநாசம் தாலுகா அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள விஷ்ணு மகா துர்க்கை அம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவில் வளாகத்தில் எலுமிச்சை பழம் விளக்கேற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

1 More update

Next Story