காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு


காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு
x

காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு

திருவாரூர்

நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டது. நரிக்குடி எமனேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story