மகாலிங்கசாமி கோவில் தைப்பூச தேரோட்டம்

திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோவில் தைப்பூச ேதரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு 5 தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.
திருவிடைமருதூர்;
திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோவில் தைப்பூச ேதரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு 5 தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.
மகாலிங்கசாமி கோவில்
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில் பிரசித்தி பெற்ற மகாலிங்கசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசத்தையொட்டி 5 ேதர்கள் வலம் வரும் தேரோட்டம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டுக்கான தைப்பூச விழா விநாயகர் கொடியேற்றத்துடன் கடந்த 26-ந் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5 தேரோட்டம் நேற்று நடந்தது. பிரமாண்ட தேர்களில் விநாயகர், சுப்ரமணியர், வள்ளி தெய்வானை, மகாலிங்கசுவாமி, பிரகத் குஜாம்பிகை, சண்டிகேஸ்வரர் அதிகாலை 5 மணிக்கு அவரவர் தேர்களில் எழுந்தருளினர். காலை 10 மணிக்கு மேல் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சாமிகள் தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
ஆயிரக்கணக்கான பக்தா்கள்
தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் தேர்களை வடம் பிடித்து இழுத்தனர். முதலில் விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து சுப்பிரமணியர் தேர் வடம் பிடிக்கப்பட்டது. பின்னர் மகாலிங்க சாமி பிரமாண்ட தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகாலிங்கா மகாலிங்கா என கோஷம் எழுப்பினர். தொடர்ந்து அம்பாள் பிரகத் குஜாம்பிகை, சண்டிகேஸ்வரர் தேர்களும் வடம் பிடித்து இழுத்துச் செல்லப்பட்டது.
தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. எம். ராஜாங்கம், திருவிடைமருதூர் பேரூராட்சி தலைவர் புனிதாமயில்வாகணன், ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம. க. ஸ்டாலின், பேரூராட்சி துணைத் தலைவர்கள் திருவிடைமருதூர் சுந்தர ஜெயபால், ஆடுதுறை கமலாசேகர், செயல் அலுவலர்கள்திருவிடைமருதூர் ஆர். முத்துக்கண்ணு, சி. ராமபிரசாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தீர்த் தவாரி
5 தேர்களும் திருவிடைமருதூரின் முக்கிய பகுதிகள் வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் வலம் வந்தது காண்போர் மனதை கவரும் வகையில் இருந்தது. அப்போது வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்கள் தேரில் எழுந்தருளிய சாமிகளை மனமுருக வேண்டினர். 5 தேர்களும் தேரோடும் நான்கு வீதிகள் வழியாக சென்று மாலை 4:30 மணிக்கு நிலையை அடைந்தது.விழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூச தீர்த்தவாரி காவிரியில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இன்று காலை பஞ்ச மூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனங்களில் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு வீதி உலாவாக காவிரிக்கு செல்கிறார்கள்.அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ தீர்த்தவாரி நடக்கிறது. இரவு வெள்ளி ரதத்தில் சாமி ஆலயம் திரும்பும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆலய கண்காணிப்பாளர் ஸ்ரீராம் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.






