ஜெகன்நாதபெருமாள் கோவில் தேரோட்டம்


ஜெகன்நாதபெருமாள் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 11 Jun 2023 1:48 AM IST (Updated: 11 Jun 2023 1:56 PM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் நாதன்கோவிலில் ஜெகன்நாதபெருமாள் கோவில் வைகாசி விசாக தேரோட்டம் நடந்தது.

தஞ்சாவூர்

கும்பகோணம்;

கும்பகோணம் நாதன்கோவிலில் ஜெகன்நாதபெருமாள் கோவில் வைகாசி விசாக தேரோட்டம் நடந்தது.

ஜெகன்நாதபெருமாள் கோவில்

கும்பகோணம் அருகே உள்ள நாதன்கோவில் கிராமத்தில் பிரசித்திப்பெற்ற ஜெகன்நாத பெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் முக்கிய கோவிலாக உள்ள இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக விழா சிறப்பாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் பெருமாள்- அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடந்தது.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் ஜெகன்நாத பெருமாள்- செண்பகவல்லித்தாயார் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இசைவாத்தியங்கள் முழங்க தேர் தேரோடும் வீதிகளில் அசைந்தாடி வந்தது.தேரை பக்தி கோஷமிட்டபடி பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து சென்றனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story