வடபத்ர காளியம்மன் கோவில் குடமுழுக்கு

குடவாசல் அருகே நாலாங்கட்டளை வடபத்ர காளியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனா்.
குடவாசல்;
குடவாசல் அருகே நாலாங்கட்டளை வடபத்ர காளியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனா்.
வடபத்ரகாளியம்மன் கோவில்
திருவாரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சக்தி தலங்களில் குடவாசல் அருகே உள்ள நாலாங்கட்டளை வடபத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் உள்ள மகாமாரியம்மன் பக்தர்களின் மனக்குறையை போக்கும் அம்மன் என்பதால் இந்த கோவில் பக்தர்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ளது.இந்த கோவிலில் திருப்பணி வேலைகள் கடந்த2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் அனைத்து வேலைகளும் நிறைவு பெற்று நேற்று காலை 10 மணி அளவில் குடமுழுக்கு நடைபெற்றது.
குடமுழுக்கு
விழாவையொட்டி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடைபெற்றது. பின்னர் கங்கை, யமுனை, காவிரி, பிரம்மபுத்ரா, நர்மதை போன்ற புண்ணிய நதிகளின் தீர்த்தங்கள் அடங்கிய கடங்கள் யாகசாலை பூஜையில் வைத்து, சிறுகுடி சிவாச்சாரியார் தலைமையில் 50 சிவாச்சாரியார்களால் பூஜை செய்து நேற்று காலை 10 மணி அளவில் குடமுழுக்கு நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.குடமுழுக்கையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகன்யா, குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி ஆகியோர் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.குடமுழுக்கு ஏற்பாடுகளை நாலாங்கட்டளை கிராம மக்கள் செய்திருந்தனர்.






