அம்மன் கோவில்களில் குடமுழுக்கு


அம்மன் கோவில்களில் குடமுழுக்கு
x

மயிலாடுதுறை, சீா்காழி, திருக்கடையூர் பகுதி அம்மன் கோவில்களில் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை

சீர்காழி;

மயிலாடுதுறை, சீா்காழி, திருக்கடையூர் பகுதி அம்மன் கோவில்களில் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திரவுபதி அம்மன் கோவில்

சீர்காழி அருகே திருகோலக்காவில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருப்பணிகள் முடிக்கப்பட்டு நேற்று குடமுழுக்கு நடைபெற்றது. முன்னதாக பூர்வாங்க பூஜையும், யாகசாலை பூஜையும் நடைபெற்றது. நேற்று காலை யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு மல்லாரி வாத்தியம் முழங்க கோவிலை வலம் வந்து விமான கலசத்தை அடைந்தது. காலை 7.10 மணிக்கு சிவாச்சாரியார்கள், வேத மந்திரம் ஓத கடத்தில் இருந்து புனித நீரை கோபுர கலசத்தில் ஊற்றி குடமுழுக்கை நடத்தி வைத்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் செய்யப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆதிமாரியம்மன் கோவில்

மயிலாடுதுறை திருவிழந்தூர் கவரத்தெருவில் ஆதிமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு நேற்று குடமுழுக்கு நடந்தது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று 6-ம் கால யாக சாலை பூஜை நிறைவடைந்து, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்து விமான கும்பத்தை அடைந்தனர். பின்னர் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடந்தது. தொடர்ந்து ஆதி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருக்கடையூர்

திருக்கடையூர் அருகே காலமநல்லூர் ஊராட்சி வடக்கட்டளை கிராமத்தில் மகா காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு நேற்று குடமுழுக்கு நடந்தது. முன்னதாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியம் மற்றும் சிவ வாத்தியம் முழங்க கோவிலை வலம் வந்து விமான கலசங்களை அடைந்தன. பின்னா் சிவாச்சாரியார்கள், விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடத்தினர். விழாவில் ஊராட்சி தலைவர் நடராஜன் உள்பட பலர் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story