அம்மன் கோவில்களில் குடமுழுக்கு


அம்மன் கோவில்களில் குடமுழுக்கு
x

திருமருகல், காக்கழனி, ஆயக்காரன்புலம் பகுதி அம்மன் கோவில்களில் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி;

திருமருகல், காக்கழனி, ஆயக்காரன்புலம் பகுதி அம்மன் கோவில்களில் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பாதாள காளியம்மன்

திருமருகல் ஊராட்சி கட்டலாடியில் உள்ள பாதாள காளியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது. முன்னதாக யாகசாலை பூஜைகள் நடந்தன. பின்னர் கடம் புறப்பாடு நடந்தது. இதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க கோவில் வளாகத்தை சுற்றி வந்தனர். பின்னர் மூலவர் விமானத்துக்கு குடமுழுக்கு நடந்தது.தொடர்ந்து கோவில் கோபுர கலசத்திற்கு வஸ்திரம் சாத்தப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. அப்போது பக்தர்கள் மீது நெல்மணிகள் மற்றும் புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பாதாள காளியம்மனுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்துதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திருமருகல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மழை மாரியம்மன் கோவில்

கீழ்வேளூர் அருகே காக்கழனி ஊராட்சியில் பழமை வாய்ந்த மழை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் குடமுழுக்கு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர் கடம் புறப்பாடு நடைபெற்றது. மங்கள வாத்தியம் முழங்க புனித நீர் அடங்கிய கலசத்தை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக எடுத்து வந்து கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மழை மாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. தொடர்ந்து மழை மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆயக்காரன்புலம்

ஆயக்காரன்புலம் 1-ம் சேத்தி பழையகரம் பகுதியில் அமைந்துள்ள மகாகாளியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது.விழாவையொட்டி நேற்று காலை 2-ம் கால யாகபூஜை நடைபெற்று, பூர்ணாகுதி மகாதீபாராதனை முடிந்தவுடன் கடம் புறப்பாடு நடந்தது. பின்னர் கலசங்களின் மேல் புனித நீர் தெளிக்கப்பட்டு குடமுழுக்கு நடந்தது. பின்னர் மூலவர் மகாகாளியம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story