காளியம்மன் வீதி உலா


காளியம்மன் வீதி உலா
x

கும்பகோணம் பகுதியில் பங்குனி திருவிழாவையொட்டி காளியம்மன் வீதி உலா நடந்தது.

தஞ்சாவூர்

கும்பகோணம்;

கும்பகோணம் இந்திரா காந்தி சாலை பகுதியில் நிரஞ்சோதி பொற்பனை முனீஸ்வார், கருப்பையா, மீனாட்சி சுந்தரேஸ்வரர், சுந்தர மகா காளியம்மன், ரேணுகா தேவி பச்சை காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் காளி திருநடன விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி 108-வது ஆண்டாக பங்குனி மாத காளி திருநடன விழா கணபதி ஹோமம் பூர்வாங்க பூஜையுடன் தொடங்கியது. பின்னர் பச்சைக்காளி, பவளக்காளி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு காப்பு கட்டுதல், கஞ்சி வார்த்தல் நடைபெற்றது. தொடர்ந்து மகாமக குளத்திலிருந்து சக்திவேல், சக்தி கரகம், அக்னிசட்டி, அக்னி கொப்பரை, பால்குடம் புறப்பட்டு முக்கிய வீதி வழியாக வந்து கோவிலை வந்தடைந்தது. பின்னர் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. நேற்று சுந்தர மகா காளியம்மன், ரேணுகா தேவி என்ற பச்சை காளியம்மன், மற்றும் விநாயகர், திருநடன வீதி உலா தொடங்கியது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) விடையாற்றி நிகழ்ச்சியுடன் விழா முடிவடைகிறது.

1 More update

Next Story