வென்னிமலை முருகன் கோவிலில் திருக்கல்யாணம்


வென்னிமலை முருகன் கோவிலில் திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 2 Nov 2022 12:15 AM IST (Updated: 2 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனை முன்னிட்டு காலை 8 மணிக்கு அம்பாள் தபசு மண்டபம் செல்லுதல், மாலை 6 மணிக்கு சுவாமி காட்சி அருளுதல், 8 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடைபெறன. தொடர்ந்து கோவிலில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


1 More update

Next Story