அய்யப்ப பக்தர்களுக்கான வேட்டி-துண்டு விற்பனை மும்முரம்


அய்யப்ப பக்தர்களுக்கான வேட்டி-துண்டு   விற்பனை மும்முரம்
x

ஈரோட்டில் அய்யப்ப பக்தர்களுக்கான வேட்டி-துண்டு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

ஈரோடு

கார்த்திகை மாதம் பிறந்தால் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து சபரி மலைக்கு சென்று அய்யப்பனை தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி இன்று (வியாழக்கிழமை) கார்த்திகை மாதம் பிறப்பதையொட்டி அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவதற்கு தேவையான பொருட்களை நேற்று வாங்கிச்சென்றனர். இதன் காரணமாக ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு பகுதிகளில் உள்ள கடைகளில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. இதன் காரணமாக வேட்டி, துண்டு விற்பனை மும்முரமாக நடந்தது.

இதுகுறித்து ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் கடை வைத்துள்ள வியாபாரி ஒருவர் கூறும்போது, 'கார்த்திகை மாதத்தில் அய்யப்ப பக்தர்கள் அணியும் வேட்டி, துண்டு மற்றும் மாலைகள் விற்பனை அதிக அளவில் இருக்கும். இந்த நிலையில் நாளை (அதாவது இன்று) கார்த்திகை மாதம் பிறப்பதால் அய்யப்ப பக்தர்கள் ஏராளமானோர் கடைக்கு வந்து இருமுடி கட்டுவதற்கு தேவையான பொருட்களை வாங்கிச்சென்றனர். தற்போது அய்யப்ப பக்தர்கள் அணியும் வேட்டி ரூ.80 முதல் ரூ.220 வரையும், துண்டு ரூ.30 முதல் ரூ.75 வரையும், இருமுடி பை ரூ.80 முதல் ரூ.220 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் துளசி மாலை, சந்தன மாலை, படிக மாலை உள்ளிட்ட மாலைகளும், கருப்பு, சிவப்பு நிற மணி மாலையும் விற்பனைக்கு உள்ளன' என்றார்.

1 More update

Next Story