புகை கக்கும் வாகனங்களை விற்கத் தடை


புகை கக்கும் வாகனங்களை விற்கத் தடை
x
தினத்தந்தி 31 March 2017 8:30 PM GMT (Updated: 31 March 2017 2:14 PM GMT)

உலகம் முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், உலக வெப்பமயமாதலை குறைக்கவும், மனிதர்கள் மற்றும் உயிரினங்களின் உடல்நிலையை பாதுகாக்கவும், எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளில் முக்கியமானது வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை மாசு அளவை குறைப்பதுதான்.

லகம் முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், உலக வெப்பமயமாதலை குறைக்கவும், மனிதர்கள் மற்றும் உயிரினங்களின் உடல்நிலையை பாதுகாக்கவும், எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளில் முக்கியமானது வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை மாசு அளவை குறைப்பதுதான். இதற்காகத்தான் 1999–ம் ஆண்டில் உச்சநீதிமன்றம், இந்தியாவில் மோட்டார் வாகனங்கள் அனைத்தும் யூரோ புகை மாசு விதிமுறைப்படி உற்பத்தி செய்யப்பட வேண்டுமென்று கருத்து தெரிவித்து, பின்பு 2000–ம் ஆண்டில் இதுதொடர்பாக உத்தரவிடப்பட்டது. புகை வெளியேற்றம் தொடர்பாக அளவீடுகளை நிர்ணயம் செய்ய ‘மஷேல்கர் குழு’ என்ற குழுவை மத்திய அரசாங்கம் அமைத்தது. அந்தக்குழு யூரோ புகை மாசு விதிக்கு நிகரான அளவீடுகளை நிர்ணயித்தது. இதன்படி, பாரத் ஸ்டேஜ் என்னும் பிஎஸ்–மி முதல் பிஎஸ்–க்ஷிமி வரை அளவீடுகளை வகுத்தது. மி–ல் தொடங்கி படிப்படியாக இந்த எண்ணிக்கை மேலே போகப்போக புகை மாசு குறையும் வகையில், மேம்பட்ட தொழில்நுட்பம் அடுத்தடுத்த நிலைகளில் வகுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அரசின் உத்தரவுக்கிணங்க, தற்போது விற்கப்பட்டிருக்கும் பிஎஸ்–மிமிமி என்ற புகை மாசு நிர்ணய அளவைக்கொண்ட மோட்டார் வாகனங்கள் உற்பத்தியையும், விற்பனையையும் நிறுத்தவேண்டும் என்று பல்வேறு அறிவுரைகள் உத்தரவுகளாக கூறப்பட்டுவந்தன. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே 2017–ம் ஆண்டு ஏப்ரல் 1–ந் தேதி முதல் பிஎஸ்–மிமிமி வாகனங்கள் விற்கப்படக்கூடாது. பிஎஸ்–மிக்ஷி என்ற அதிக கரியமிலவாயுவை வெளியிடாத வாகனங்கள்தான் விற்கப்படவேண்டும் என்றும், 2020–ம் ஆண்டு முதல் பிஎஸ்–க்ஷிமி என்ற மிகக்குறைவாக புகை மாசு வெளியிடும் வாகனங்கள்தான் விற்கப்படவேண்டும் என்றும் உத்தரவுகள் இருந்தன. ஆனாலும், மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் இதை கண்டுகொள்ளவில்லை. இப்போது உச்சநீதிமன்றம் கண்டிப்பான ஒரு உத்தரவை பிறப்பித்துவிட்டது.

இன்று ஏப்ரல் 1–ந் தேதி முதல் அனைத்து பிஎஸ்–மிமிமி மோட்டார் வாகனங்களையும் விற்கவோ, போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யவோ கூடாது என்று உத்தரவிட்டுவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்ட நேரத்தில், வாகன உரிமையாளர்களெல்லாம் தற்போது எங்களிடம் பிஎஸ்–மிமிமி ரகத்தில் ஏறத்தாழ 8 லட்சத்து 24 ஆயிரம் வாகனங்கள் விற்பனையாகாமல் இருக்கின்றன. இதில், 96 ஆயிரம் வாகனங்கள் கனரக வாகனங்களாகும். 6லட்சத்துக்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்களாகும். ஏறத்தாழ 40 ஆயிரம் மூன்று சக்கர வாகனங்களாகும். எனவே இவற்றையெல்லாம் விற்பனை செய்ய காலக்கெடு வேண்டும் என்று மோட்டார் தயாரிப்பாளர்கள் வைத்த வேண்டுகோளை கோர்ட்டு ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் ஏறத்தாழ ரூ.30 ஆயிரம் கோடி எங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்று வாகன உரிமையாளர்கள் கோரினர்.

ஆனால், மக்களின் உடல்நலம் என்பது மோட்டார் வாகன தொழிலுக்குரிய வர்த்தக ரீதியிலான முறையீடுகளுக்கு மேலானது என்று கூறி உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மக்களின் உடல்நலத்தை பாதுகாக்கவும் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு, ஒரு கசப்பான மாத்திரையைப்போல சமுதாயத்துக்கு பலனளிக்கும் ஒன்றுதான். தங்களிடமுள்ள சரக்குகளை விற்க, யாருமே எதிர்பார்க்காத விலை தள்ளுபடியை அறிவித்து, மோட்டார் வாகன விற்பனையாளர்கள் பெரும்பாலான ஸ்டாக்கை விற்றுவிட்டார்கள். எண்ணெய் கம்பெனிகளும் பிஎஸ்–மிக்ஷி ரக வாகனங்களுக்கு ஏற்றவகையில் டீசல், பெட்ரோல் சரிவர கிடைப்பதில்லை என்ற குறைபாட்டை போக்குவதற்கு வழிமுறை செய்ய வேண்டும். நாட்டில் தற்போது 19 கோடி மோட்டார் வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்த பிஎஸ்–மிமிமி ரக வாகனங்கள் விற்பனைக்கு தடைவிதித்ததுபோல, ஓடிக்கொண்டிருக்கும் அனைத்து வாகனங்களுக்கும் வாகன புகை பரிசோதனை சான்றிதழ்களை அவ்வப்போது பெறவேண்டும் என்பதை அரசு கட்டாயமாக்கவேண்டும்.


Next Story