காவிரி நீரை சேமிப்பது எப்படி?


காவிரி நீரை சேமிப்பது எப்படி?
x
தினத்தந்தி 29 July 2018 9:30 PM GMT (Updated: 29 July 2018 12:15 PM GMT)

ஏறத்தாழ 125 ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவிற்கும் இருந்த காவிரி பிரச்சினைக்கு நிறையோ, குறையோ உச்சநீதிமன்றம் நல்ல ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.

றத்தாழ 125 ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவிற்கும் இருந்த காவிரி பிரச்சினைக்கு நிறையோ, குறையோ உச்சநீதிமன்றம் நல்ல ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. காவிரி நடுவர்மன்றம் தனது தீர்ப்பில் தமிழ்நாட்டிற்கு, கர்நாடகம் ஆண்டு தோறும் 192 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் 177.25 டி.எம்.சி.யாக குறைத்து தமிழ் நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடுவதை கண்காணிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் அமைத் துள்ளது. ஆக, ஒவ்வொரு மாதமும் தமிழ்நாட்டிற்கு உரிய அளவில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் பொறுப்பு இந்த மேலாண்மை ஆணையத்திற்குத்தான் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் அடுத்த ஆண்டு மே மாதம் வரையிலான காலக்கட்டத்தில் தண்ணீர் திறந்துவிடப்படும். கடந்த ஜூன் மாதம் 13.3 டி.எம்.சி. தண்ணீரும், இந்த மாதம் 26–ந் தேதிவரை 105.2 டி.எம்.சி. தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் பெய்த பெருமழையால் அங்கு தேக்கி வைக்க முடியாத நிலையில் வடிகாலாக திறந்து விடப்படும் கூடுதல் தண்ணீரை, மொத்தக் கணக்கிலிருந்து கழித்துவிடாதீர்கள் என்பது விவசாயிகளின் கருத்தாகும். 

இந்தநிலையில், காவிரி நீர் பெருக்கெடுத்து ஓடி, முக்கொம்பு, கல்லணை, கீழணை, கொள்ளிடம் போன்ற எல்லா நீர்நிலைகளும் நிரம்பி தண்ணீர் வீணாக கடலில்போய் கலக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கடலில்போய் கலக்கும் தண்ணீரை சேமித்துவைக்க அணைகள் கட்டலாமே? என்ற ஒரு கோரிக்கை இருக்கிறது. இதற்கு முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதிலில், ‘மேட்டூரிலிருந்து நாகப்பட்டினம் வரை செல்கின்ற நீர்வழிப்பாதை சமவெளியாக இருக்கிறது. எங்கேயும் தண்ணீரை தேக்கிவைக்கக்கூடிய சூழ்நிலை இல்லை. மேட்டூர் அணையிலிருந்து, கடைசியில் கடலில் கலக்கும்வரை சமவெளி பரப்பாக இருப்பதினால், எந்த இடத்தில் அணை கட்டினாலும் ஊருக்குள் தண்ணீர் சென்றுவிடும். எங்கெல்லாம் தண்ணீரை சேமிக்க முடியும் என்ற கணக்கீடு செய்வதற்காக ஓய்வுபெற்ற பொறியாளர்களை ஒரு குழுவாக அமைத்து ஆய்வுப்பணிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். மேட்டூர் அணை மட்டுமல்ல, தமிழகத்தில் இருக்கின்ற நதிகள், ஓடைகள் வழியாக வீணாக கடலில்போய் கலக்கின்ற நீரை சேமிப்பதற்கு அரசால் நடவடிக்கை மேற் கொள்ளப்பட இருக்கிறது. 6 மாதத்தில் அறிக்கை தரவிருக்கிறார்கள். அந்த அறிக்கை பெற்றவுடன், தேவையான இடத்தில் அணைகள் கட்டி தண்ணீரை தேக்கக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்படும் என்று கூறியுள்ளார். 

முதல்–அமைச்சரின் அறிவிப்பு நிச்சயமாக வரவேற்கத்தக்கது. ஆனால் அணைகள் கட்டமுடியாதே தவிர, 3 அடி முதல் 5 அடி வரையிலான உயரம்கொண்ட தடுப்பணைகளை தாராளமாக கட்டலாம். கொள்ளிடம் சோமரசம்பேட்டையில் ஏற்கனவே ஒரு தடுப்பணை பயன்பாட்டில் இருக்கிறது. இதுபோல, மேட்டூரிலிருந்து முக்கொம்பு வரை 10 தடுப்பணைகள் கட்டலாம். கொள்ளிடத்தில் ‘பெட் டேம்’ என்று கூறப்படும் 

7 கதவணைகள் இருக்கின்றன. இதில் மின்சார உற்பத்தி நடக்கிறது. இதுபோல, திருச்சிக்கு கீழே கொள்ளிடத்தில் 7 இடங்களில் மேலும் 7 கதவணைகள் கட்டுவதற்கு ஒரு திட்டம் உண்டு. அதை நிறைவேற்ற லாமே? என்கிறார் பொதுப்பணித்துறையில் ஓய்வுபெற்ற சிறப்பு தலைமை பொறியாளர் அ.வீரப்பன். எனவே, தமிழக அரசு தடுப்பணைகள் மற்றும் கதவணைகள் கட்டும் முயற்சியை தீவிரமாக தொடங்கவேண்டும். 

Next Story