திரும்பி வந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி
கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கொரோனா பாதிப்பு எல்லா வேலைவாய்ப்புகளையும் முடக்கிவிட்டது.
முறைசாரா தொழில்கள், சிறு, குறு தொழில்கள் எல்லாவற்றிலும் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் எல்லாம், கொரோனா பாதிப்பு தொடங்கியதில் இருந்தே வேலைவாய்ப்பை இழந்துவிட்டனர். இதில் பெரிதும் பாதிக்கப்பட்டது, தங்கள் சொந்த மாநிலங்களில் இருந்து பிழைப்பு தேடி வேறு மாநிலங்களுக்குச் சென்ற தொழிலாளர்கள்தான்.
இந்தியா முழுவதும் இவ்வாறு, ஏறத்தாழ 4 கோடி புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இருக்கிறார்கள். கொரோனா பாதிப்பால் வேலை இழந்த அனைத்து மாநிலங்களிலும் உள்ள தொழிலாளர்கள் பிழைக்க வந்த மாநிலங்களில் வேலையில்லை. இனி நமது சொந்த ஊருக்காவது போகலாம் என்று மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு ஊருக்கு புறப்படத்தொடங்கினர்.
ஆரம்பக்கட்டத்தில், போக்குவரத்து வசதியில்லாமல் பலர் கால்நடையாகவும், இருசக்கர வாகனங்களிலும் புறப்பட்டு செல்லத்தொடங்கினர். இதில், வழியில் பலர் உயிரிழந்தனர். இந்தநிலையில், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக சிறப்பு ரெயில்கள் விடப்பட்டன. இதுவரை, இத்தகைய ரெயில்களில் 98 லட்சம் பேர் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பியிருக்கிறார்கள். மேலும் பலர் திரும்பக் காத்திருக்கிறார்கள்.
நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட ஒரு வழக்கில், 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், “இவ்வாறு புலம் பெயர்ந்த தொழிலாளர்களை எல்லாம் 15 நாட்களுக்குள் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மாநில அரசுகள் செய்ய வேண்டும். அந்த ஏற்பாடுகளையும், அப்படித் திரும்பிவரும் தொழிலாளர்களுக்காக வேலைவாய்ப்பு உள்பட என்னென்ன நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன? என்பதையும், மாநில அரசுகள் ஜூலை 8-ந்தேதி கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது.
மாநில அரசுகள், தங்கள் மாநிலங்களில் இவ்வாறு திரும்பி வந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மாவட்ட வாரியாகவும், பஞ்சாயத்து யூனியன் வாரியாகவும் கணக்கெடுத்து, அவர்களுக்கு என்ன திறமை இருக்கிறது என்பதை கண்டறிந்து, உரிய பயிற்சிகளை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஆங்காங்கு ஆலோசனை மையங்களை ஏற்படுத்தி, அவர்களுக்கு பலன் அளிக்கும் அரசாங்க திட்டங்கள் என்னென்ன இருக்கின்றன? எந்தெந்த வகையில், அவர்கள் வேலைவாய்ப்பு பெற முடியும்? என்ற ஆலோசனைகளை வழங்க வேண்டும். இது மட்டுமல்லாமல், தாங்கள் வேலை பார்த்த மாநிலங்களுக்கே திரும்பிச் செல்ல விரும்பும் தொழிலாளர்களுக்கும் உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறது.

பெரும்பாலும் உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் அசாம் போன்ற மாநிலங்களில் இருந்துதான் மற்ற மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகம் சென்றிருந்தார்கள். இப்போது அவர்கள் திரும்பி வரத்தொடங்கியதால், அந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகியிருக்கிறது என்றும் தகவல் வந்துள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து இன்னும் ஏராளமான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்காக காத்திருக்கிறார்கள். இந்தநிலையில், தமிழக அரசு கோர்ட்டு உத்தரவு வருவதற்கு முன்பே அதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டது. கொரோனா தொற்றின் காரணமாக வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திரும்பிவந்த புலம் பெயர்ந்த தமிழக தொழிலாளர்களுக்கு அவர்களது வேலைத்திறன், முன் அனுபவங்களை கண்டறிந்து தகுதிக்கேற்ப தனியார் துறைகளில் பணி வாய்ப்பினை பெற உதவுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு வெளியே இருந்து திரும்பிவந்த தமிழர்கள், தாங்கள் விரும்பும் திறன் பயிற்சி மற்றும் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பை பெற உதவுவதற்கு என www.tnskill.tn.gov.in என்ற இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை வரவேற்க வேண்டும் என்றாலும், அதற்கு முன்னதாகவே தமிழ்நாட்டில் நடவடிக்கை எடுத்த, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.
Related Tags :
Next Story