பயம் இல்லையா; புரியவில்லையா?
தமிழ்நாட்டில், அதுவும் குறிப்பாக சென்னையில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் இருக்கிறது. உலகில் முதன்முதலில், கொரோனா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள உகான் நகரில் தாக்கத் தொடங்கியது.
இந்தியாவிற்குள் ஜனவரி 30-ந்தேதி முதல் பிப்ரவரி 3-ந்தேதி வரை, உகான் நகரில் இருந்து வந்த3 பேர்களால் கேரளாவில் கால் பதித்தது. தமிழ்நாட்டில் மார்ச் 7-ந்தேதி, முதலில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரும் மஸ்கட்டில் இருந்து வந்தவர். அப்படியே நத்தை வேகத்தில் மார்ச் மாதம் உயர்ந்து கொண்டிருந்த கொரோனா, ஏப்ரல் 15-ந்தேதி 1,242 பேருக்கும், மே 15-ந்தேதி 10,108 பேருக்கும், இப்போது ஜூன் 15-ந்தேதி 46,504 பேருக்கும் பரவி இருந்தது.
இந்தியாவிலேயே கொரோனா பாதிப்புக்கு உள்ளாகிய மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. அண்டை மாநிலங்களான ஆந்திராவில் 15-ந்தேதி கணக்குப்படி 6,456 பேருக்கும், கர்நாடகாவில் 7,213 பேருக்கும், கேரளாவில் 2,543 பேருக்கும், தெலுங்கானாவில் 5,193 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருந்தது.
தமிழ்நாட்டிலுள்ள, மொத்த பாதிப்புகளில் ஏறத்தாழ 71.49 சதவீத பாதிப்பு சென்னையில்தான் இருக்கிறது. எப்படி சென்னையில் இருந்து வருகின்றவர்களை, தமிழ்நாட்டில் மற்ற இடங்களில் உள்ளவர்கள் அச்சம் கலந்த பார்வையோடு பார்க்கிறார்களோ, அதுபோல அண்டை மாநிலங்களில் உள்ளவர்கள், தமிழ்நாட்டில் இருந்து வருபவர்களைக் கண்டு அச்சப்படுகிறார்கள். கர்நாடக அரசு நேற்று முன்தினம் ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து வருபவர்களை 3 நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் தனிமைப்படுத்தியும், தொடர்ந்து 11 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தியும் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் அதிவேகமாக கொரோனா பரவுவதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு வருகிற 19-ந்தேதி நள்ளிரவு 12 மணி முதல் 30-ந்தேதி நள்ளிரவு 12 மணிவரை, 12 நாட்களுக்கு, சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலுள்ள சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. சில அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் தளர்வுகளை வழங்கியுள்ளது.
ஆனால், 21-ந்தேதி, 28-ந்தேதி ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் எந்த தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியதுதான், கொரோனா அதிகமாக பரவியதற்கு ஒரு காரணம் என்று எல்லோருக்கும் தெரியும். அப்படி இருந்தும், காசிமேட்டில் மீன் வாங்கவும், கடைகளில் பொருட்கள் வாங்கவும், திருமழிசையில் காய்கறி வாங்கவும், மாதவரத்தில் பழங்கள் வாங்கவும் மக்கள் சமூக இடைவெளி இல்லாமல் குவிந்து வருவதைப்பார்த்தாலும், சாலைகளில் முகக்கவசம் அணியாமல், சமூகஇடைவெளியை கடைப்பிடிக்காமல் செல்வதைப் பார்த்தாலும், பொதுமக்களுக்கு கொரோனா பற்றிய பயம் இல்லையா? அல்லது அதன் உக்கிரம் புரியவில்லையா? என்ற சந்தேகம் எழுகிறது. இதற்கு மக்களை மட்டும் குறைசொல்லி பலனில்லை. இதற்குரிய ஏற்பாடுகளையும், கடும் கட்டுப்பாடுகளையும் அரசும் கண்டிப்பாக செய்ய வேண்டும்.
இந்த 12 நாட்கள் முழு ஊரடங்கு காலத்தில், 21 மற்றும் 28-ந் தேதிகளில் அமல்படுத்தப்போகும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கைப் போல் பொதுமக்கள் தினமும் பின்பற்றினால், கொரோனா பரவலை நிச்சயமாக தடுத்துவிடலாம். முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
இந்த ஊரடங்கு காலத்தில் பரிசோதனைகளை அரசு இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். 15-ந்தேதி வரை479 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மொத்தத்தில் சென்னையில் கொரோனா பரவலை தடுப்பது, இந்த 12 நாட்களிலும் மக்கள் அளிக்கப்போகும் ஒத்துழைப்பிலும், சுயகட்டுப்பாட்டிலும்தான் இருக்கிறது.

Related Tags :
Next Story