தலை வாசல் பகுதியில் கவனிக்க வேண்டியவை


தலை வாசல் பகுதியில் கவனிக்க வேண்டியவை
x
தினத்தந்தி 15 April 2017 4:30 AM IST (Updated: 14 April 2017 6:26 PM IST)
t-max-icont-min-icon

* ஒரு வீட்டுக்கு லட்சுமி ஸ்தானம் எனப்படுவது தலைவாசல் ஆகும்.

 *    தலைவாசலுக்கு அருகில் அருகில் குப்பைகள் போடப்படும் கூடையை வைப்பது கூடாது.

*    குப்பை கூளங்கள் இல்லாமல் சுத்தமாகவும், வெளிச்சமாகவும் உள்ள தலைவாசல் எப்போதும் நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் தன்மை பெற்றது.

*    தலைவாசல் கதவில் மரத்தால் செய்யப்பட்ட 'ஸ்வஸ்திக்' சின்னம், மலர்களின் படங்கள் ஆகியவற்றை வைப்பது நல்லது.

*    தலைவாசலுக்கு நேர் எதிராக பாழடைந்த கட்டிடம், மின் கம்பம் மற்றும் கோவில் போன்றவை இருப்பது கூடாது.

*    அவ்வாறு அமைந்திருக்கும் பட்சத்தில், அவை தலைவாசலில் இருந்து 50 அடிக்கும் அதிகமான தொலைவில் இருந்தால் பெரிய பாதிப்புகள் இல்லை.

Next Story