குடியிருப்புகளின் நீர் தேவையை சமாளிக்க ‘ரீ–சார்ஜ்’ குழிகள்
அடுக்கு மாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகளின் நீர் தேவையை சமாளிக்க நிபுணர்கள் எளிய வழியை தெரிவித்துள்ளார்கள்.
அடுக்கு மாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகளின் நீர் தேவையை சமாளிக்க நிபுணர்கள் எளிய வழியை தெரிவித்துள்ளார்கள். அதாவது, மேற்கூரையிலிருந்து வழிந்து வரக்கூடிய மழை நீர் மொத்தமாக ஒரே குழாய் வழியாக, தரைக்கு கீழே அமைக்கப்பட்டுள்ள குழிக்கு செல்லுமாறு அமைக்கவேண்டும். ரீ–சார்ஜ் குழிகள் எனப்படும் இந்த குழிகள் ஒன்று அல்லது இரண்டு மீட்டர் அகலமும், இரண்டு முதல் மூன்று மீட்டர் ஆழமும் கொண்டதாக இருக்கலாம்.
அமைக்கும் முறை
அந்த குழிகளில் சற்று பெரிய அளவு கற்கள் முதலிலும், அதன் மேல் ஜல்லி கற்களும், அதற்கு மேற்பரப்பில் மணலும் போட்டு நிரப்பவேண்டும். மேற்கூரையிலிருந்து மணல் போடப்பட்ட மட்டம் வரை அமைக்கப்பட்ட குழாய் மூலம், மேற்கூரையிலிருந்து வரும் நீரானது நிலத்தடிக்கு சென்று விடும். வழிந்து வரும் மழை நீரோடு சேர்ந்து வரும் தூசிகள் அல்லது இதர குப்பைகள் மணல் பரப்பில் வடிகட்டப்பட்டுவிடும்.
பில்டர் தேவை
குறைவான அளவு மேற்கூரை கொண்ட கட்டிடங்களின் ரீ–சார்ஜ் குழியில் உடைந்த செங்கற்கள் அல்லது கூழாங்கற்களை நிரப்பலாம். அவ்வாறு நிரப்பும்போது, கூரையில் இருந்து விழும் நீருக்கான குழாயில் பில்டர் அமைப்பை பொருத்துவது நல்லது. அதனால், இலைகள், தழைகள் குழிக்குள் செல்லாமல் தடுக்க முடியும்.
மேல் மாடியிலும் அமைக்கலாம்
மேல் மாடியில் சிறியதாக இடம் ஒதுக்கி தொட்டி அமைத்து அதிலும், மழை நீரை சேமிக்கலாம். இதில் கற்கள், மணல் போன்றவற்றுக்கு பதிலாக பில்டர்கள் பொருத்தவேண்டும். அதன் வழியாக, நீர் தாமாக சுத்திகரிக்கப்பட்டு நேரடியாக தோட்டம் அல்லது சமையலறை புழக்கத்துக்கு கிடைக்குமாறு அமைத்துக்கொள்ளலாம்.

Related Tags :
Next Story