மரப்பலகைகள் தயாரிப்பில் நவீன தொழில்நுட்பம்
குடியிருப்புகள் அமைப்பது உள்ளிட்ட கட்டுமான பணிகளில் கான்கிரீட் பயன்பாடு காரணமாக ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்தும் விதத்தில் பல்வேறு தொழில் நுட்பங்கள் உலக நாடுகளில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
குடியிருப்புகள் அமைப்பது உள்ளிட்ட கட்டுமான பணிகளில் கான்கிரீட் பயன்பாடு காரணமாக ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்தும் விதத்தில் பல்வேறு தொழில் நுட்பங்கள் உலக நாடுகளில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கான்கிரீட்டுக்கு மாற்றாக மரங்களை கட்டுமானங்களில் பயன்படுத்துவது பற்றி நீண்ட காலமாக பல நாடுகள் தொழில்நுட்ப ரீதியாக முயற்சி செய்து வந்தன.
சி.எல்.டி பேனல்கள்
அதன் தொடர்ச்சியாக கட்டுமான பொருட்களை தயாரிக்கும் ஜெர்மனியைச் சேர்ந்த நிறுவனத்தால் சி.எல்.டி பேனல்கள் (Cross Laminated Timber) 1990–ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பின்னர் பல மேல்நாடுகளில் மர வீடுகளை கட்டமைக்கும் பணிகளில் இவ்வகையில் உருவாக்கிய மரத்தாலான பேனல்கள் பயன்படுத்தப்பட்டன.
பெரிய மரங்கள் அவசியமில்லை
அதாவது, ‘லேமினேஷன்’ முறையில் தயாரிக்கப்படும் அளவுகளைக்காட்டிலும், அதிகமான பரப்பு கொண்டதாக மரப்பலகைகளை தயாரிக்கும் இந்த தொழில்நுட்ப முறை ‘கிராஸ் லேமினேட்டடு டிம்பர்’ (CLT- Cross Laminated Timber) என்று சொல்லப்படும். இந்த முறையின் காரணமாக, பெரிய மரங்களை பல நாட்களுக்கு முன்னதாகவே வாங்கி அதை பக்குவப்படுத்தி வைத்து பயன்படுத்தும் அவசியமில்லை.
இணைப்புகள்
பொதுவாக, மரப்பலகைகளை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் பெரிய அளவுகளில் நீட்சி செய்து பயன்படுத்துவதற்கு, குறிப்பிட்ட தொழில்நுட்ப முறை சார்ந்த இணைப்புகள் (Joints) கூடுதலாக தேவைப்படும். அதன் அடிப்படையில் பிளைவுட் இணைப்புகள் போல ஒன்றோடு ஒன்றாக மரப்பலகைகளை இணைத்து, தேவையான அளவிற்கு நீளம் மற்றும் அகலம் கொண்டதாக உருவாக்கப்படும். மேலும், செய்ய வேண்டிய பணிகளுக்கு ஏற்ற கனம் மற்றும் பருமன் கொண்டதாக தயாரிக்கப்பட்ட பலகைகளை எளிதாக வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம். செயற்கையாக தயாரிக்கப்பட்ட சி.எல்.டி டிம்பர் பேனல் தொழில்நுட்பம் நமது பகுதிகளில் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
Related Tags :
Next Story