கட்டிட மேற்பூச்சில் மூன்று வகைகள்


கட்டிட மேற்பூச்சில் மூன்று  வகைகள்
x
தினத்தந்தி 27 July 2019 2:30 AM IST (Updated: 26 July 2019 6:03 PM IST)
t-max-icont-min-icon

சுவர்களுக்கான மேற்பூச்சு பணிகள் உட்புறம், வெளிப்புறம் மற்றும் உட்புறக் கூரை ஆகிய மூன்று பகுதிகளில் செய்யப்படுகிறது.

சுவர்களுக்கான மேற்பூச்சு பணிகள் உட்புறம், வெளிப்புறம் மற்றும் உட்புறக் கூரை ஆகிய மூன்று பகுதிகளில் செய்யப்படுகிறது. அதற்கான சிமெண்டு–மணல் கலவையை, உட்புறப் பூச்சுக்கு 1:5 என்கிற விகிதத்திலும், வெளிப்புறப் பூச்சுக்கு 1:6 என்கிற விகிதத்திலும், உட்புற கூரைப் பூச்சுக்கு 1:3 என்கிற விகிதத்திலும் பயன்படுத்த பொறியாளர்கள் பரிந்துரை செய்துள்ளார்கள். உட்புறம் மற்றும் கூரை உட்புறம் ஆகிய பணிகளுக்கு 12 மி.மீ அளவுக்கும் மேற்படாமல் கலவையின் கனம் இருக்க வேண்டும். அதை விடவும் அதிக கனமாக பூசவேண்டிய நிலையில், அந்த பணியை இரண்டு முறைகளாக செய்வது நல்லது. வெளிப்புற சுவர் பூச்சின் கனம் 16 மி.மீ அளவுக்கும் மேற்படாமல் இருக்கவேண்டும். ‘பிளாஸ்டரிங்’ என்ற மேற்பூச்சு பணிகளை செய்யும்போது, சுவரின் இரு பக்கங்களிலும் சிறு டைல்ஸ் பிட்டுகளை வைத்து, அதன் மீது நூலை பிடித்துப்பார்த்து, மேற்பூச்சு சீரான பரப்பில் அமைவதை உறுதி செய்துகொள்ளலாம்.

Next Story