பாரம்பரிய கட்டிட சீரமைப்பில் பழமையான தொழில்நுட்பம்
உலக அளவில் பழமை வாய்ந்த கட்டமைப்பாக பிரமிடுகள் குறிப்பிடப்படுகின்றன.
எகிப்து நாட்டில் உள்ள பாரம்பரிய கட்டமைப்புகளான பிரமிடுகளை புதுப்பிக்கும் பணியில் 1984-ம் ஆண்டு ஈடுபட்டிருந்த சர்வதேச அமைப்புக்கு, நவீன கட்டுமான தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால், எகிப்தியர்கள் கையாண்ட பழைய கட்டுமான வழிமுறைகளை பின்பற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. உலக அளவில் பழமை வாய்ந்த கட்டமைப்பாக பிரமிடுகள் குறிப்பிடப்படுகின்றன. சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தில் உள்ள ராஜ குடும்பத்தினர் மறைந்தால், அவர்களை பிரமிடுகளுக்குள் அடக்கம் செய்யும் வழக்கம் இருந்தது. அதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட பிரமிடுகள் கட்டப்பட்டன. அவற்றில் மிகவும் பெரிய அளவு கொண்ட ‘தி கிரேட் பிரமிடு’ ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாக இருந்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்னர் கெய்ரோ அருகே உள்ள பல பிரமிடுகளின் வெளிப்புறங்கள் காலநிலை மாற்றங்களால் சிதைவுகள் உருவாகின. அவற்றை சீர் செய்வதற்காக ஒரு கட்டுமான நிறுவனம் முன்வந்தது. சுமார் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ‘ஸ்பிங்ஸ்’ என்ற பிரமிடை புதுப்பிக்கும் பணிகளை அந்த சர்வதேச கட்டுமான அமைப்பு தொடங்கியது. சிமெண்டு மேற்பூச்சு பணிகளை செய்யும்போது ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த சுண்ணாம்பு கற்களில் விரிசல்கள் ஏற்பட ஆரம்பித்தன. மேற்கொண்டு பணிகளை தொடர்ந்து செய்ய நவீன கட்டுமான தொழில் நுட்பங்களை பயன்படுத்தாமல், பழைய காலத்தில் எகிப்தியர்கள் கடைப்பிடித்த பாரம்பரிய வழிமுறையை பின்பற்றி பிரமிடுகள் சீர் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story