20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை நடக்கிறது: இந்திய அணி அயர்லாந்து சென்றது


20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை நடக்கிறது: இந்திய அணி அயர்லாந்து சென்றது
x

Image Courtesy : Akshar Patel twitter @akshar2026

இந்தியா-அயர்லாந்து இடையிலான 20 ஓவர் ஆட்டங்கள் நாளையும், 28-ந்தேதியும் டப்ளின் நகரில் நடக்கிறது.

டப்ளின்,

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் பயிற்சி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது. ஹர்திக் பாண்ட்யா தலைமையில் உருவாக்கப்பட்ட 2-ம் தர இந்திய அணி இரண்டு சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக மும்பையில் இருந்து அயர்லாந்துக்கு புறப்பட்டு சென்றது.

இந்தியா-அயர்லாந்து இடையிலான 20 ஓவர் ஆட்டங்கள் நாளையும், 28-ந்தேதியும் டப்ளின் நகரில் நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது. ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் பயிற்சி கிரிக்கெட்டில் ஆடுவதால் அவர்களுக்கு பதிலாக அயர்லாந்து தொடரில் சூர்யகுமார், சஞ்சு சாம்சன் களம் இறங்குகிறார்கள். இந்த தொடருக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ்.லட்சுமண் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.


Next Story