கிரிக்கெட்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: மும்பை அணியின் ஆதிக்கத்துக்கு முட்டுக்கட்டை போடுமா குஜராத் இறுதிப்போட்டி இன்று தொடக்கம் + "||" + Ranji cricket Start Today

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: மும்பை அணியின் ஆதிக்கத்துக்கு முட்டுக்கட்டை போடுமா குஜராத் இறுதிப்போட்டி இன்று தொடக்கம்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: மும்பை அணியின் ஆதிக்கத்துக்கு முட்டுக்கட்டை போடுமா குஜராத் இறுதிப்போட்டி இன்று தொடக்கம்
மும்பை–குஜராத் அணிகள் இடையிலான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி இந்தூரில் இன்று தொடங்குகிறது. ரஞ்சி இறுதிப்போட்டி 83–வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதில் கோப்பையை கைப்பற்ற ம

இந்தூர்,

மும்பை–குஜராத் அணிகள் இடையிலான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி இந்தூரில் இன்று தொடங்குகிறது.

ரஞ்சி இறுதிப்போட்டி

83–வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதில் கோப்பையை கைப்பற்ற மும்பை–குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 14–ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டி தினசரி காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகிறது.

நடப்பு சாம்பியனும், 41 முறை கோப்பையை வென்ற வலுவான மும்பை அணி அரைஇறுதிப்போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தமிழகத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

முதல்முறையாக...

66–வது முறையாக களம் காணும் குஜராத் அணி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்து இருக்கிறது. அந்த அணி அரைஇறுதியில் டோனியின் சொந்த மாநிலமான ஜார்கண்ட் அணியை 123 ரன்கள் வித்தியாசத்தில் சாய்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

பார்த்தீவ் பட்டேல் தலைமையிலான குஜராத் அணி உள்ளூர் போட்டியில் முன்னேற்றம் கண்டு வரும் அணிகளில் ஒன்றாகும். அந்த அணி கடந்த சீசனில் விஜய் ஹசாரே கோப்பையை வென்றது அதற்கு அடையாளமாகும். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருப்பதால் இந்த போட்டியில் ஆடவில்லை. அது அந்த அணிக்கு இழப்பாகும். வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங், இரட்டை சதம் அடித்து ரன் குவிப்பில் முன்னணியில் இருக்கும் பிரியங்க் பாஞ்சல், மன்பிரீத் ஜூனேஜா ஆகியோர் அந்த அணிக்கு வலுசேர்ப்பார்கள்.

ஆதித்யா தாரே

ஆதித்ய தாரே தலைமையிலான மும்பை அணியில் ஸ்ரீரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், அபிஷேக் நாயர், பல்விந்தர் சிங் சந்து உள்ளிட்ட சிறந்த வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். 45 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியதில் 4 முறை மட்டுமே மும்பை அணி இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தனது ஆதிக்கத்தை தொடர மும்பை அணி முஸ்தி காட்டும். அதேநேரத்தில் முதல்முறையாக கோப்பையை உச்சி முகர குஜராத் அணி முனைப்பு காட்டும். எனவே இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.