பேட்டிங்கில் தோனி இரட்டை சாதனை


பேட்டிங்கில் தோனி இரட்டை சாதனை
x
தினத்தந்தி 1 July 2017 10:02 AM GMT (Updated: 1 July 2017 10:02 AM GMT)

ஒரு நாள் போட்டியில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர்களில் அசாருதீனை முந்திய டோனி 4-வது இடத்தை பெற்றார்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு டோனி முக்கிய பங்கு வகித்தார். அவர் 35 வயதிலும் 78 ரன்கள் குவித்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.

15-வது ரன்னை எடுத்த போது டோனி ஒரு நாள் போட்டியில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர்களில் 4-வது இடத்தை பிடித்தார். அவர் அசாருதீனை முந்தினார். தெண்டுல்கர், கங்குலி, டிராவிட் ஆகியோருக்கு அடுத்த படியாக டோனி உள்ளார்.

அதோடு அதிக ரன்குவித்த விக்கெட்கீப்பர்-பேட்ஸ்மேன் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார். அவர் தற்போது கில்கிறிஸ்டை முந்தியுள்ளார். முதலிடத்தில் இலங்கையின் குமார் சங்ககாரா உள்ளார். அவர் 360 போட்டிகளில் விளையாடி 13341 ரன்கள் எடுத்துள்ளார்.

அதிக சிக்ஸர் அடித்த வீரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். அவர் இதுவரை 322 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அவருக்கு முன்னணியில் அப்ரிடி(476), கிரிஷ் கெயில்(434), மெக்குல்லம்(398), ஜெயசூர்யா(352) ஆகியோர் உள்ளனர்.

Next Story