இலங்கை அணியின் கேப்டன் சன்டிமால் ஆஸ்பத்திரியில் அனுமதி இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆடமாட்டார்


இலங்கை அணியின் கேப்டன் சன்டிமால் ஆஸ்பத்திரியில் அனுமதி இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆடமாட்டார்
x
தினத்தந்தி 21 July 2017 9:13 PM GMT (Updated: 2017-07-22T02:42:48+05:30)

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் சன்டிமால் காலேவில் உள்ள ஆஸ்பத்திரியில் நேற்று காலை அனுமதிக்கப்பட்டார்.

காலே,

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் சன்டிமால் காலேவில் உள்ள ஆஸ்பத்திரியில் நேற்று காலை அனுமதிக்கப்பட்டார். நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் காலேவில் வருகிற 26–ந் தேதி தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சன்டிமால் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 27 வயதான சன்டிமால் சமீபத்தில் தான் இலங்கை டெஸ்ட் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் இலங்கை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் சம்பகா ராமநாயகே தனிப்பட்ட காரணத்துக்காக பதவி விலகினார். அவருக்கு பதிலாக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


Next Story