கிரிக்கெட்

இந்திய அணி வீரர்களை ஆட்டம் காணவைத்த இலங்கை புது மாப்பிள்ளை + "||" + Dedication and determination to fly the 🇱🇰 on high -married yesterday, playing for his country today!

இந்திய அணி வீரர்களை ஆட்டம் காணவைத்த இலங்கை புது மாப்பிள்ளை

இந்திய அணி வீரர்களை ஆட்டம் காணவைத்த இலங்கை புது மாப்பிள்ளை
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் பந்து வீச்சாளர் அகிலா தனன்ஞ்சயா 6 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணியை ஆட்டம் காணவைத்தார்.
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் பந்து வீச்சாளர் அகிலா தனன்ஞ்சயா 6 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணியை ஆட்டம் காண வைத்தார்.இந்தியா- இலங்கை அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டியில், டோனி மற்றும் புவனேஷ்வர் குமாரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா போராடி வெற்றி பெற்றது.

ஒருகட்டத்தில் 109/1 என்று வலுவான நிலையில் இருந்த இந்திய அணியை, ஆட்டம் காண வைத்தவர் தான் சுழல்பந்து வீச்சாளர் அகிலா தனன்ஞ்சயா.இவர் லெக்பிரேக், கூக்ளி, கேரம் பால், தூஸ்ரா, மற்றும் ஆப் ஸ்பின் என்று பல நுட்பங்களில் பந்து வீசுகிறார். அஜந்தா மெண்டிஸ் போல் இன்னொரு திறமையான பந்து வீச்சாளர்

ஜாதவ், கோலி, ராகுல், பாண்ட்யா, ரோஹித் சர்மா என்று அனைவரும் இவர் என்ன வீசுகிறார் என்று ஆச்சரியமடைந்தனர்.6 விக்கெட்டுகள் வீழ்த்தியும் இலங்கை அணி வெற்றி பெற முடியாமல் போனதால், அவருக்கு மிகுந்த ஏமாற்றம் கிடைத்தது.

இப்படி ஜொலித்த இவருக்கு நேற்று முன் தினம் தான் திருமணம் நடந்துள்ளது, அதன் பின்னர் அவர் மறுநாளே அணிக்காக விளையாடி அசத்தியுள்ளார், இவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.