கிரிக்கெட்

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் இன்று நடக்கிறது + "||" + Indo-Sri Lanka teams collide 20 Oversight Match

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் இன்று நடக்கிறது

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் இன்று நடக்கிறது
இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் இன்று நடக்கிறது.
கொழும்பு,

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒருநாள் போட்டி தொடரை 5-0 என்ற கணக்கிலும் இந்திய அணி முழுமையாக இலங்கையை வீழ்த்தி ‘ஒயிட்வாஷ்’ செய்தது.

இந்த நிலையில் இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் அபாரமாக செயல்பட்டது போல் 20 ஓவர் போட்டியிலும் வெற்றியை நீட்டிக்க இந்திய அணி ஆர்வம் காட்டும். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்திய அணி வலுவாக உள்ளது. பேட்டிங்கில் கேப்டன் விராட்கோலி, ரோகித் சர்மா ஆகியோர் மிகவும் சிறப்பான நிலையில் உள்ளனர். இருவரும் இரண்டு சதம் அடித்து அசத்தி இருந்தனர். டோனி, ஹர்திக் பாண்ட்யா, கேதர்ஜாதவ், மனிஷ்பாண்டே போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். தாயார் உடல்நிலை சரியில்லாததால் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் நாடு திரும்பி இருப்பதால் அந்த இடம் ரஹானேவுக்கு கிடைக்கும் என்று தெரிகிறது.

பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா நல்ல நிலையில் உள்ளார். அவர் ஒருநாள் போட்டி தொடரில் 15 விக்கெட்டுகள் அள்ளினார். புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சாஹல், அக்‌ஷர் பட்டேல் ஆகியோரும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடரை தொடர்ச்சியாக இழந்ததால் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கும் இலங்கை அணி ஆறுதல் வெற்றியை பெற கடுமையாக முயற்சிக்கும். ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயல்படாத வேகப்பந்து வீச்சாளர்கள் விஷ்வா பெர்னாண்டோ, துஷ்மந்தா சமீரா ஆகியோர் நீக்கப்பட்டு சுழற்பந்து வீச்சாளர் ஜெப்ரி வாண்டர்சே, ஆல்-ரவுண்டர் தாசுன் ஷானகா ஆகியோர் இலங்கை அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

20 ஓவர் போட்டியில் இரு அணிகளும் இதுவரை 10 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் இந்திய அணி 6 ஆட்டத்திலும், இலங்கை அணி 4 ஆட்டத்திலும் வெற்றி கண்டுள்ளது. தர வரிசையில் இரு அணிக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் கிடையாது. இந்திய அணி 5-வது இடத்திலும், இலங்கை அணி 8-வது இடத்திலும் உள்ளன.

இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்-3 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

இந்த போட்டிக்கான இரு அணி வீரர்கள் வருமாறு:-
இந்தியா: விராட்கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், மனிஷ் பாண்டே, ரஹானே, கேதர் ஜாதவ், டோனி, ஹர்திக் பாண்ட்யா, அக்‌ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர்குமார், ஷர்துல் தாகூர்.

இலங்கை: உபுல் தரங்கா (கேப்டன்), ஏஞ்சலோ மேத்யூஸ், டிக்வெல்லா, தில்ஷன் முனவீரா, தாசுன் ஷானகா, ஸ்ரீவர்த்தனா, ஹசரங்கா, அகிலா தனஞ்ஜெய், ஜெப்ரி வாண்டர்சே, இசுரு உடனா, சீக்குகே பிரசன்னா, திசரா பெரேரா, மலிங்கா, சுரங்கா லக்மல், விகும் சஞ்சயா.