கிரிக்கெட்

பயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய கிரிக்கெட் வாரிய லெவன் அணி தோல்வி + "||" + Australia won by 103 runs

பயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய கிரிக்கெட் வாரிய லெவன் அணி தோல்வி

பயிற்சி ஆட்டம்:  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய கிரிக்கெட் வாரிய லெவன் அணி தோல்வி
பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய கிரிக்கெட் வாரிய லெவன் அணி தோல்வி அடைந்தது.
சென்னை,

ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளது. முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 17-ந்தேதி சென்னை சேப்பாக்கக்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கிறது.

இந்த தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி ஒரே ஒரு பயிற்சி கிரிக்கெட்டில் விளையாடுகிறது. இதன்படி ஆஸ்திரேலியா- இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிகள் மோதும் பயிற்சி ஆட்டம் (50 ஓவர்) சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோயின்ஸ் 76 ரன்களும், டிராவிஸ் கெட் 65 ரன்களும், டேவிட் வார்னர் 64 ரன்களும் எடுத்தனர். இந்திய  கிரிக்கெட் வாரிய லெவனில் வாஷிங்டன் சுந்தர், குஷாங் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதையடுத்து பேட் செய்த இந்திய கிரிக்கெட் வாரிய லெவன் அணி 48.2 ஓவர்கள் விளையாடி 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.