கிரிக்கெட்

ஒரு நாள் கிரிக்கெட்டில் விராட் கோலியே சிறந்த பேட்ஸ்மேன்: ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கிளார்க் + "||" + Virat Kohli better ODI batsman than Steve Smith: Michael Clarke

ஒரு நாள் கிரிக்கெட்டில் விராட் கோலியே சிறந்த பேட்ஸ்மேன்: ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கிளார்க்

ஒரு நாள் கிரிக்கெட்டில் விராட் கோலியே சிறந்த பேட்ஸ்மேன்: ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கிளார்க்
ஒரு நாள் கிரிக்கெட்டில் விராட் கோலியே சிறந்த பேட்ஸ்மேன் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கிளார்க் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி, 

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் விராட் கோலியே தற்போது சிறந்த பேட்ஸ்மேன் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.டெல்லியில் நடந்த, இந்தியா–ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் தொடர்பான விவாத நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் இந்த கருத்தை முன்வைத்தார். இது குறித்து கிளார்க் கூறும் போது, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலிதான் மிகச்சிறந்த வீரர் ஆவார். அதே சமயத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டீவன் சுமித் சிறந்த பேட்ஸ்மேன் என்று கருதுகிறேன்.

கேப்டன்ஷிப்பை எடுத்துக் கொண்டால், இருவருமே தங்களது கிரிக்கெட் வாழ்க்கையில் ஏறக்குறைய ஒரே மாதிரியான நிலையில் இருக்கிறார்கள். இருவரும் இளம் கேப்டன்கள். தரமான ஆட்டக்காரர்கள். தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறார்கள். ஏற்கனவே நான் சொன்னது போல், ஒரு கேப்டனாக அணியை வெற்றி பெற வைப்பதே முக்கியம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.