கிரிக்கெட்

ஆஷிஷ் நெக்ரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் + "||" + Ashish Nehra Set to Retire After New Delhi T20I Against New Zealand

ஆஷிஷ் நெக்ரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார்

ஆஷிஷ் நெக்ரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார்
ஆஷிஷ் நெக்ரா நவம்பர் ஒன்றாம் தேதி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்து உள்ளார்.


மும்பை,

ஆஷிஷ் நெக்ராவின் சொந்த ஊரான டெல்லியில் நவம்பர் ஒன்றாம் தேதி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இந்த போட்டி முடிந்ததும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஆஷிஷ் நெக்ரா ஓய்வு பெறுகிறது. ஆஷிஷ் நெக்ரா தன்னுடைய ஓய்வு முடிவை தலைமை பயிற்சியாளார் ரவிசாஸ்திரி மற்றும் கேப்டன் விராட் கோலியிடம் தெரிவித்துவிட்டார் என பிசிசிஐ அதிகாரி கூறிஉள்ளார். “எங்களுக்கு தெரிந்தவரையில் டெல்லியில் நடைபெறும் டி20 போட்டியை அடுத்து ஓய்வு பெறுவதற்கு முடிவு எடுத்து உள்ளார், அதனை ரவி சாஸ்திரி மற்றும் விராட் கோலியிடம் தெரிவித்து உள்ளார். தன்னுடைய சொந்த மாநிலமான டெல்லியில் கடைசி போட்டியில் விளையாட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உள்ளார்,” என பிசிசிஐ அதிகாரி கூறிஉள்ளார். 

அடுத்தக்கட்ட வீரர்கள் சிறப்பாக செயல்பட வழிவகை செய்யும் வகையில் ஓய்வு பெறப்போவதாக 38 வயதாகும் நெக்ரா குறிப்பிட்டு உள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளிலும் விளையாட வாய்ப்பு இல்லை எனவும் கூறப்படுகிறது. கடந்த 1999-ம் ஆண்டு இந்தியா அணியில் இடம்பெற்றார் நெக்ரா. முகமது அசாருதீன் தலைமையிலான அணியில் இடம்பெற்றார். இந்திய அணிக்காக இதுவரையில் 17 டெஸ்ட்கள், 120 ஒருநாள் போட்டிகள், 26 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 44 விக்கெட்களையும், ஒருநாள் போட்டிகளில் 157 விக்கெட்களையும், டி20 போட்டிகளில் 34 விக்கெட்களையும் எடுத்து உள்ளார். 

இலங்கை அணிக்கு எதிரான போட்டிகள் வரையில் அவர் அணியில் நீடிப்பார் என மிகவும் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அதற்கு முன்னதாகவே அவர் விலகுகிறார், அதனையே சரியென அவர் நினைக்கிறார் எனவும் மூத்த அதிகாரி ஒருவர் கூறிஉள்ளார். 

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற டி20 சர்வதேச தொடருக்கான இந்திய அணியில் நெக்ரா இடம்பெற்று இருந்தார், ஆனால் முதல் இரு போட்டிகளில் விளையாடும் 11 வீரர்கள் வரிசையில் இடம்பெறவில்லை. 2011-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் நெக்ரா இடம்பெற்று இருந்தார். அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் போட்டியிலும் 2 விக்கெட்களை வீழ்த்தினார். காயம் காரணமாக இறுதிப்போட்டியில் விளையாடவில்லை.