கிரிக்கெட்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் சென்ற பஸ் மீது கல்வீசிய சம்பவம்: கவுகாத்தி ரசிகர்கள் மன்னிப்பு கோரினர் + "||" + Indian cricket fans line-up outside Australian team's hotel in Guwahati to apologise following 'team bus attack'

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் சென்ற பஸ் மீது கல்வீசிய சம்பவம்: கவுகாத்தி ரசிகர்கள் மன்னிப்பு கோரினர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் சென்ற பஸ் மீது கல்வீசிய சம்பவம்: கவுகாத்தி ரசிகர்கள் மன்னிப்பு கோரினர்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் சென்ற பஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு கவுகாத்தி ரசிகர்கள் மன்னிப்பு கோரினர்
கவுகாத்தி,

அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று முன்தினம் இரவு நடந்த இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை 118 ரன்களில் சுருட்டியது. இந்த இலக்கை எளிதில் எட்டிப்பிடித்த ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்தது. கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நாளை நடக்கிறது.

கவுகாத்தி போட்டியில் வெற்றி பெற்றதும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் தனி பஸ் மூலம் தாங்கள் தங்கி இருந்த ஓட்டலுக்கு திரும்பினார்கள். அப்போது வழியில் மர்ம நபர்கள் சிலர் திடீரென பஸ் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் பஸ்சின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின. அதிர்ஷ்டவசமாக வீரர்கள் அனைவரும் காயமின்றி தப்பினார்கள். இந்திய அணியின் தோல்வியை ஜீரணிக்க முடியாத ரசிகர்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு பலத்த பாதுகாப்புடன் ஆஸ்திரேலிய வீரர்கள் அழைத்து செல்லப்பட்டனர். 

இந்த சம்பவத்தால் வீரர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் கவனக்குறைவு ஏற்பட்டதா? என்ற சர்ச்சை கிளம்பி இருக்கிறது. கல் வீசி தாக்கிய சம்பவம் தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்து போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கிரிக்கெட் ரசிகர் ஒருவர் செய்த தவறுக்கு வருத்தம் தெரிவித்து, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், ஆஸ்திரேலிய வீரர்கள் தங்கியுள்ள ஓட்டலுக்கு வெளியே மன்னிப்பு கோருவதாக எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய படி நின்றனர். 

சில முட்டாள்தனமான ரசிகர்களின் செயல் எங்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் எங்கள் அன்புக்குரிய ஆஸ்திரேலிய வீரர்களே! எங்களை மன்னித்து விடுங்கள்” என்ற வாசங்களும் ரசிகர்கள் ஏந்திய பதாகைகளில் இடம் பெற்று இருந்தது.