கிரிக்கெட்

ஒய்வு பெறுவது என்பது எனது தனிப்பட்ட முடிவு: நெஹரா + "||" + If I have decided something, there is no going back. If I retire, I won't even play the IPL: Ashish Nehra

ஒய்வு பெறுவது என்பது எனது தனிப்பட்ட முடிவு: நெஹரா

ஒய்வு பெறுவது என்பது எனது தனிப்பட்ட முடிவு: நெஹரா
ஒய்வு பெறுவது என்பது எனது தனிப்பட்ட முடிவு என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நெஹரா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹரா நவம்பர் 1-ந்தேதிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது முடிவை அணி நிர்வாகத்துக்கும், பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கும் தெரிவித்து விட்டார். அது மட்டுமின்றி அடுத்த ஆண்டில் அவர் ஐ.பி.எல். போட்டியிலும் விளையாடப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.  

செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்த நெஹரா, ஓய்வு பெறுவது என்பது எனது தனிப்பட்ட முடிவு எனவும் நவம்பர் 1 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் போட்டியோடு ஓய்வு பெறுகிறேன். சொந்த நகரத்தில் ஓய்வு பெறுவதை விட மிகப்பெரும் விஷயம் எதுவும் இல்லை. நான் ஏதேனும் ஒரு முடிவை எடுத்துவிட்டால் அதில் இருந்து பின் வாங்க மாட்டேன். ஐபிஎல் போட்டிகளிலும் விளையாட போவது இல்லை” இவ்வாறு அவர் தெரிவித்தார்.