கிரிக்கெட்

இந்திய அணியில் இடம் பெற தகுதி அளிக்கும் யோ யோ டெஸ்ட்டில் வென்றார் அஷ்வின் + "||" + Ravichandran Ashwin Clears Mandatory Test To Play For India, Says 'Yo Yo Test Done And Dusted'

இந்திய அணியில் இடம் பெற தகுதி அளிக்கும் யோ யோ டெஸ்ட்டில் வென்றார் அஷ்வின்

இந்திய அணியில் இடம் பெற தகுதி அளிக்கும் யோ யோ டெஸ்ட்டில் வென்றார் அஷ்வின்
இந்திய அணியில் இடம் பெற தகுதி அளிக்கும் யோ யோ டெஸ்ட்டில் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் தேர்ச்சி பெற்றுள்ளார்.
பெங்களூரு,

இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற அண்மைக்காலமாக யோ யோ என்ற உடல் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த உடல் தகுதி தேர்வில் வென்றால், மட்டும் இந்திய அணியில் இடம் பெறுவதற்கு அவர்களின் பெயர் பரிசீலனை செய்யப்படும். இந்த முக்கியமான  உடல்தகுதி தேர்வில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் தேர்ச்சி பெற்றுள்ளார். 

இங்கிலாந்தில் நடைபெற்ற கவுண்டி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற அஷ்வின் நாடு திரும்பியதும், பெங்களூரு சென்று யோ யோ டெஸ்டில் பங்கேற்று அதில் வென்றுள்ளார். இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்திலும் அஷ்வின் உறுதி படுத்தியுள்ளார். இலங்கைக்கு எதிரான தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த அஷ்வின், ஆச்சர்யப்படும் வகையில் ஆஸ்திரேலிய தொடரில் நிராகரிக்கப்பட்டது  நினைவிருக்கலாம்.