கிரிக்கெட்

முகமது ஹபீஸ் பந்து வீச்சு மீது மீண்டும் புகார் + "||" + Mohammed Hafeez again complained about the ball

முகமது ஹபீஸ் பந்து வீச்சு மீது மீண்டும் புகார்

முகமது ஹபீஸ் பந்து வீச்சு மீது மீண்டும் புகார்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் 37 வயதான முகமது ஹபீஸ், சுழற்பந்து வீசக்கூடியவர்.
துபாய்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் 37 வயதான முகமது ஹபீஸ், சுழற்பந்து வீசக்கூடியவர். இலங்கைக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியின் போது அவர் 8 ஓவர்கள் பந்து வீசி 39 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார். இந்த நிலையில் அவரது பந்து வீச்சு சந்தேகம் அளிக்கும் வகையில் இருப்பதாக கள நடுவர்கள், ஐ.சி.சி. போட்டி நடுவரிடம் புகார் கொடுத்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் அவர் 3-வது முறையாக இத்தகைய சர்ச்சையில் சிக்கியுள்ளார். அடுத்த 14 நாட்களில் ஹபீஸ் தனது பந்து வீச்சை பரிசோதனைக்குட்படுத்தியாக வேண்டும். அதுவரை அவர் தொடர்ந்து பவுலிங் செய்யலாம்.