கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் வாரிய லெவனுக்கு எதிரான 2-வது பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி + "||" + New Zealand team win

இந்திய கிரிக்கெட் வாரிய லெவனுக்கு எதிரான 2-வது பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி

இந்திய கிரிக்கெட் வாரிய லெவனுக்கு எதிரான 2-வது பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி
இந்திய கிரிக்கெட் வாரிய லெவனுக்கு எதிரான 2-வது பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
மும்பை,

நியூசிலாந்து - இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிகள் இடையிலான 2-வது பயிற்சி ஆட்டம் மும்பையில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணியில் டாப்-3 வீரர்களான காலின் முன்ரோ (26 ரன்), கேப்டன் கனே வில்லியம்சன் (1 ரன்), மார்ட்டின் கப்தில் (32 ரன்) ஆகியோர் சீக்கிரம் வெளியேறினாலும், ராஸ் டெய்லரும் (102 ரன், 83 பந்து, 14 பவுண்டரி, ஒரு சிக்சர்), விக்கெட் கீப்பர் டாம் லாதமும் (108 ரன், 97 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) சதம் அடித்து அணியை தூக்கி நிறுத்தினர்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 343 ரன்கள் குவித்தது. இந்திய லெவன் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தொடர்ந்து களம் கண்ட இந்திய கிரிக்கெட் வாரிய லெவன் அணி 47.1 ஓவர்களில் 310 ரன்களுக்கு ஆட்டம் இழந்து, 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக குர்கீரத் மான் சிங் 65 ரன்களும், கருண் நாயர் 53 ரன்களும், உனட்கட் 44 ரன்களும் எடுத்தனர். எதிர்பார்க்கப்பட்ட விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் (7 ரன்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (24 ரன்) ஏமாற்றினர். நியூசிலாந்து பவுலர்களில் சான்ட்னெர் 3 விக்கெட்டுகளும், டிம் சவுதி, காலின் முன்ரோ தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். முன்னதாக முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய லெவன் அணி வென்றது நினைவிருக்கலாம்.

அடுத்து இந்தியா-நியூசிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

முதலாவது பயிற்சியின் போது இடுப்பு பகுதியில் காயமடைந்த நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் டாட் ஆஸ்டில் இந்திய ஒரு நாள் தொடரில் இருந்து விலகியிருக்கிறார். அவருக்கு பதிலாக மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் சோதி சேர்க்கப்பட்டுள்ளார்.