கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி படுதோல்வி, தொடரை இழந்தது + "||" + Clinical New Zealand seal series 2-0

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி படுதோல்வி, தொடரை இழந்தது

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி படுதோல்வி, தொடரை இழந்தது
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 240 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தது.
ஹாமில்டன்,

நியூசிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 373 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 66.5 ஓவர்களில் 221 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. நியூசிலாந்து அணி தரப்பில் டிரென்ட் பவுல்ட் 4 விக்கெட்டும், டிம் சவுதி, கிரான்ட்ஹோம், நீல் வாக்னர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

152 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 77.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கேப்டன் கனே வில்லியம்சன் 54 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ராஸ் டெய்லர் 198 பந்துகளில் 11 பவுண்டரியுடன் 107 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

பின்னர் 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வெஸ்ட்இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சை ஆடியது. வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. தொடக்க ஆட்டக்காரர் போவெல் ரன் எதுவும் எடுக்காமலும், ஹெட்மெர் 15 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இந்த விக்கெட்டுகளை முறையே டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி ஆகியோர் கைப்பற்றினார்கள்.

27 ரன்னுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வெஸ்ட்இண்டீஸ் அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 2-வது இன்னிங்சில் 8 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து இன்றும் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி  63.5 ஓவர்கள் மட்டுமே தாக்குபிடித்தது. 203 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வெஸ்ட் இண்டீஸ், 240 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.