கிரிக்கெட்

வீராட் கோலி- அனுஷ்கா திருமணம் பிரபலங்கள் வாழ்த்து + "||" + wishes pour in for virat kohli and anushka sharma

வீராட் கோலி- அனுஷ்கா திருமணம் பிரபலங்கள் வாழ்த்து

வீராட் கோலி- அனுஷ்கா திருமணம் பிரபலங்கள் வாழ்த்து
வீராட் கோலி- அனுஷ்கா திருமணத்திற்கு கிரிக்கெட் - சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தனர். டெலிவிஷன் விளம்பரம் ஒன்றின் படப்பிடிப்பில் முதல் முறையாக இருவரும் சந்தித்த போது காதல் ஏற்பட்டது. முதலில்  மறைமுகமாக இருந்த இந்த காதல் பின்னர் வெளிப்படையாக இருந்தது.

4 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.  இதற்காக வீராட்கோலி இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் 20 ஓவர் போட்டியில் ஓய்வு கேட்டு இருந்தார். இவர்களது திருமணம்  இத்தாலியில் நடைபெறும் என்று யூகங்கள் வெளியானது. ஆனால் எந்த தேதியில் திருமணம் என்பது தெரியாமல் இருந்தது.

இந்த நிலையில் வீராட் கோலி-அனுஷ்கா சர்மா திருமணம் இத்தாலியில் உள்ள மிலன் நகர் அருகே டுஸ்கேனி சொகுசு விடுதி யில் நேற்று நடந்தது. இந்து முறைப்படி இந்த திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு :-

 * ஆஸ்திரியாவில் இருந்து  பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு வைர மோதிரத்தை அனுஷ்கா அணிந்து இருந்தார்.அனுஷ்கா. அதன் வடிவமைப்பு கற்பனைக்கும் எட்டாத அழகாக இருக்கிறது. மற்றும் வியக்கத்தக்க கூறுகளை பிரதிபலிக்கிறது, ஓவ்வொரு முறை பார்க்கும் போது  வெவ்வேறு கோணங்கள் தோன்றும்.அதன் விலை ரூ.1 கோடி 

* நிச்சயதார்த்த மோதிரத்தின் விலையை விட  அவர்களின் திருமண செய்த இடத்தின் ( போர்கோ பினோசிச்சியோ.) வாடகை  அதிகமாகும். இது உலகின்  மிக விலையுயர்ந்த விடுமுறை இடங்களின் போர்ப்ஸ் பட்டியலில் 20 இடத்தில் உள்ளது. இங்கு தங்கும் வாடகை ரூபாய் 6,50,000 முதல் ரூ. 14,00,000 வரை இந்த விகிதங்கள் உள்ளன. ஒருவாரம் தங்கினால் ஒருவர் ரூ. 1 கோடி கொடுக்க வேண்டும்.

* ஈரானிய டர்க்கைஸ், புஷ்பராக கல்வகை, அன்கட் டைமண்டு மற்றும் ஜப்பானிய வளமான முத்து ஆகியவற்றைக் கொண்ட 22 காரட் தங்கத்தினால் வடிவமைக்கப்பட்ட ஜிமிக்கியை அனுஷ்கா சர்மா அணிந்திருந்தார்

* விராட் - அனுஷ்கா ஜோடியின்  திருமண உடை மற்றும் அலங்காரப் பொறுப்பு முழுவதையும் சபயாஷாச்சி முகர்ஜி (Sabyasachi Mukherjee) 67 டிசைனர் குழுக்களோடு இணைந்து 32 நாள்களுக்கும் மேலாக டிசைன் செய்த உடையில் இருவரும் ஜொலித்தனர்.