கிரிக்கெட்

காதல் மனைவியை அழைத்து செல்கிறார், விராட் கோலி + "||" + Love goes to pick up his wife, Virat Kohli

காதல் மனைவியை அழைத்து செல்கிறார், விராட் கோலி

காதல் மனைவியை அழைத்து செல்கிறார், விராட் கோலி
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடருக்குச் செல்லும் இந்திய கேப்டன் விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மாவையும் உடன் அழைத்து செல்கிறார்.
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், சாதனை மன்னனுமான விராட் கோலியும், பிரபல இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் 2013-ம் ஆண்டு விளம்பர படம் ஒன்றில் நடித்த போது காதல்வலையில் விழுந்தனர். அதன் பிறகு காதல் பறவைகளாக சுற்றி திரிந்தனர். இந்தியாவின் புகழ்பெற்ற அழகான காதல் ஜோடியாக அறியப்பட்ட இவர்களின் திருமணம் எப்போது? என்ற கேள்வி அடிக்கடி எழும். அது மாதிரியான சமயங்களில் திருமணம் செய்யும் போது எதையும் மறைக்காமல் வெளிப்படையாக அறிவிப்பேன் என்று விராட் கோலி சொல்லி சமாளித்து விடுவார்.


ஆனால் ஏனோ, விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் எந்த அறிவிப்பும் இன்றி ரகசியமாக திருமணம் செய்து கொண்டு விட்டனர். இத்தாலியின் டஸ்கனி அருகே 800 ஆண்டுகால பழமையான ஒரு கிராமத்தில் அமைந்துள்ள உல்லாச சொகுசு விடுதியில் இவர்களது திருமணம் இந்து முறைப்படி நேற்று முன்தினம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் இருவரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த உல்லாச விடுதியின் ஒரு வார கால வாடகை ஏறக்குறைய ரூ.1 கோடியாகும்.

புதுமண தம்பதியின் அடுத்த கட்ட திட்டங்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. கோலி -அனுஷ்கா சர்மாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இரண்டு விதமாக நடத்தப்படுகிறது. ஒரு வரவேற்பு, நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்காக டெல்லியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் வருகிற 21-ந்தேதி இரவு 8.30 மணிக்கு நடக்கிறது.

அதைத் தொடர்ந்து 26-ந்தேதி மும்பையில் இன்னொரு பிரமாண்ட வரவேற்பு மற்றும் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த விருந்தில் சக மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள்.

வரவேற்பு முடிந்து ஓரிரு நாட்களில் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி தென்ஆப்பிரிக்காவுக்கு புறப்படுகிறது. அவர்களுடன் கோலி தம்பதியினரும் செல்கிறார்கள். அங்கு கோலியுடன் புத்தாண்டை கொண்டாடி விட்டு ஜனவரி முதல் வாரத்தில் அனுஷ்கா சர்மா மட்டும் தாயகம் திரும்பி விடுவார். விராட் கோலி 2 மாதங்கள் தென்ஆப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 6 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவார்.

கோலியை போலவே அனுஷ்கா சர்மாவும் ரொம்பவே ‘பிசி’. இப்போதைக்கு சினிமாவை விட்டு விலகும் எண்ணம் அவருக்கு இல்லை. மும்பைக்கு திரும்பியதும் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கும் ‘ஆனந்த் எல் ராய்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். பிப்ரவரியில் வருண் தவானுடன், ‘சுய் தாஹா’ என்ற படத்தில் நடிக்கிறார். வழக்கமான விளம்பர நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார்.

விராட் கோலி டெல்லியை சேர்ந்தவர் என்றாலும் மனைவியுடன் மும்பையில் வசிக்க முடிவு செய்துள்ளார். மும்பை வோர்லிக்கு இடம் பெயர்ந்து புதிய வீட்டில் இருவரும் குடியேற இருக்கிறார்கள். கோலி, அனுஷ்காவுக்கு ஒரே வயது (29) என்றாலும், கோலியை விட அனுஷ்கா சர்மா 6 மாதங்கள் மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கையில் புதிய இன்னிங்சை தொடங்கியுள்ள கோலி- அனுஷ்கா ஜோடிக்கு ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், அக்தர், அப்ரிடி மற்றும் ஏராளமான பிரபலங்கள் ‘டுவிட்டர்’ மூலம் வாழ்த்து மழை பொழிந்துள்ளனர்.

இவர்களது திருமண புகைப்படங்களை எடுத்த நிறுவனத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பே திருமணம் பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது பற்றி எதுவும் கசியவிடக்கூடாது என்று விராட் கோலி தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதால், அவர்கள் இது பற்றி கடைசி வரை வாய்திறக்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. சாதனைகளின் தலைவன் விராட் கோலி -முன்னாள் ஜாம்பவான்கள் பாராட்டு
சாதனைகளின் தலைவன் விராட் கோலி என முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பாராட்டி உள்ளனர்.
2. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய வீரர் புஜாரா சதம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் புஜாரா சதம் அடித்து அசத்தினார்.
3. பெர்த் டெஸ்ட்: 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
4. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி தடுமாற்றம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது.
5. தொடர்ந்து பயமுறுத்தும் ஆஸ்திரேலிய வீரர்கள்; சிம்ம சொப்பனமாக விளங்குவாரா கோலி?
விராட் கோலிக்கு எதிராக நாங்கள் ரகசிய திட்டங்களை வைத்திருக்கிறோம் என்று ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.