கிரிக்கெட்

ஆஸ்திரேலியா–இங்கிலாந்து 3–வது டெஸ்ட் இன்று தொடக்கம் + "||" + Australia-England 3rd Test starts today

ஆஸ்திரேலியா–இங்கிலாந்து 3–வது டெஸ்ட் இன்று தொடக்கம்

ஆஸ்திரேலியா–இங்கிலாந்து 3–வது டெஸ்ட் இன்று தொடக்கம்
ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆ‌ஷஸ் தொடரின் 3–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் இன்று தொடங்குகிறது.

பெர்த்,

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆ‌ஷஸ் தொடரின் 3–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் இன்று தொடங்குகிறது. முதல் இரு டெஸ்டுகளில் வெற்றி கண்ட ஆஸ்திரேலிய அணி, இந்த போட்டியிலும் ஆதிக்கம் செலுத்துவதை எதிர்நோக்கி உள்ளது. ஆஸ்திரேலிய அணியில் ஹேன்ட்ஸ்கோமுக்கு பதிலாக ஆல்–ரவுண்டர் மிட்செல் மார்ஷ் இடம் பெறுகிறார். அடுத்தடுத்து தோல்வியால் நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி எழுச்சி பெற கடுமையாக போராடும் என்பதால் போட்டியில் பரபரப்புக்கு குறைவிருக்காது.

இந்திய நேரப்படி காலை 8 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்டை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.