கிரிக்கெட்

ரோகித் சர்மாவின் கருணை + "||" + The grace of Rohit Sharma

ரோகித் சர்மாவின் கருணை

ரோகித் சர்மாவின் கருணை
இலங்கை கிரிக்கெட் அணியின் போட்டியை காண இந்தியாவுக்கு வந்திருந்த முகமது நிலம் என்ற இலங்கை ரசிகர், தொடர் நிறைவடைந்ததும் ஊருக்கு திரும்புவதற்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்.
ஆனால் திடீரென அவரது தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆபரேஷன் செய்ய வேண்டிய சூழல் உருவானதால் உடனடியாக நாடு திரும்ப வேண்டியதானது. ஆனால் அவரிடம் புதிதாக விமான டிக்கெட் எடுக்க பணம் இல்லை. தெண்டுல்கரின் தீவிர ரசிகரான சுதிர் கவுதம் இந்த விஷயத்தை இந்திய பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மாவின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.


உடனே ரோகித் சர்மா, இலங்கை ரசிகரை ஓட்டல் அறைக்கு வரவழைத்து ரூ.20 ஆயிரம் கொடுத்து உதவினார். மேலும் தந்தையின் ஆபரேஷன் செலவுக்கு பணம் வேண்டுமா என்று கேட்ட போது வேண்டாம் என்று அந்த ரசிகர் மறுத்து விட்டார். விராட் கோலியும் அந்த ரசிகருக்கு உதவ முன்வந்தது குறிப்பிடத்தக்கது.