கிரிக்கெட்

4 நாள் டெஸ்ட் கிரிக்கெட்டில் தினமும் 98 ஓவர்கள் பந்து வீச வேண்டும் + "||" + 4 day Test cricket

4 நாள் டெஸ்ட் கிரிக்கெட்டில் தினமும் 98 ஓவர்கள் பந்து வீச வேண்டும்

4 நாள் டெஸ்ட் கிரிக்கெட்டில்
தினமும் 98 ஓவர்கள் பந்து வீச வேண்டும்
4 நாள் டெஸ்ட் கிரிக்கெட்டில் தினமும் 98 ஓவர்கள் பந்து வீச வேண்டும் ஐ.சி.சி. புதிய விதிமுறை.
துபாய்,

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 5 நாட்கள் கொண்டதாகும். அதில் மேலும் சுவாரஸ்யத்தையும், விறுவிறுப்பையும் அதிகரிக்க செய்யும் நோக்கில் 4 நாள் கொண்ட டெஸ்ட் போட்டியை நடத்த தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் முன்வந்தது. அந்த அணியுடன் விளையாட ஜிம்பாப்வே சம்மதம் தெரிவித்ததன் பேரில் இவ்விரு அணிகள் இடையே 4 நாள் கொண்ட டெஸ்ட் போட்டி வருகிற 26-ந்தேதி போர்ட்எலிசபெத்தில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அங்கீகாரம் கொடுத்துள்ளது. அது மட்டுமின்றி 2019-ம் ஆண்டு உலக கோப்பை வரை இந்த பரீட்சார்த்த முயற்சி தொடரும், ஆனால் எந்த அணியையும் இத்தகைய டெஸ்டில் விளையாடுமாறு கட்டாயப்படுத்தமாட்டோம் என்று ஐ.சி.சி. ஏற்கனவே கூறியுள்ளது.

இந்த நிலையில் 4 நாள் டெஸ்ட் போட்டிக்கு சில புதிய விதிமுறைகளை ஐ.சி.சி. வகுத்துள்ளது. வழக்கமான 5 நாள் போட்டியில் ஒவ்வொரு நாளும் குறைந்தது 90 ஓவர்கள் பந்து வீசப்படும். ஆனால் 4 நாள் போட்டியில் தினமும் குறைந்தது 98 ஓவர்கள் வீசப்பட வேண்டும். அதற்காக ஆட்ட நேரமும் அரைமணி நேரம் அதிகரிக்கப்படும். இதே போல் இரு அணிகளும் முதல் இன்னிங்சில் விளையாடி முடித்த பிறகு 200 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கும் அணி பாலோ-ஆன் கொடுக்க முடியும். இந்த பாலோ-ஆன் வித்தியாசம் புதுமையான இந்த டெஸ்ட் போட்டிக்கு 150 ரன்களாக குறைக்கப்படுகிறது.