கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான சம்பளம் இரு மடங்காக உயர்கிறது? + "||" + Indian cricketers may get 100% salary hike

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான சம்பளம் இரு மடங்காக உயர்கிறது?

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான சம்பளம் இரு மடங்காக உயர்கிறது?
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான சம்பளத்தை இருமடங்காக உயர்த்த பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

உலகின் மிக பணக்கார கிரிக்கெட் அமைப்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் திகழ்கிறது. இந்திய அணியில் விளையாடும் வீரர்களுக்கான ஒப்பந்தம் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அவர்களுக்கான சம்பளம் வழங்கப்படுகிறது. ஏ- பிரிவு வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 கோடியும், பி- பிரிவு வீரர்களுக்கு ரூ.1 கோடியும், சி -பிரிவினருக்கு ரூ.50 லட்சமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஊதிய ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்தது.

இந் நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருமானம் அதிகரிப்பதால் அதற்கு இணையாக வீரர்களின் சம்பளத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று இந்திய வீரர்கள் வலியுறுத்தினர். பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே,  கிரேடு வீரர்களுக்குரிய சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ரவி சாஸ்திரி ஆகியோர் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராயை சந்தித்து சம்பளம் விவகாரம் குறித்து பேச்சு நடத்தினர். அவர்கள் கோரிக்கைக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் நூறு சதவிகிதம் உயரக்கூடும் என கூறப்படுகிறது. வரும் தொடரில் இருந்து இந்த சம்பள உயர்வு அமலுக்கு வரும் என தெரிகிறது. உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கும் சம்பளம் இருமடங்காக உயரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.