கிரிக்கெட்

இலங்கை 20 ஓவர் போட்டி அணியில் மலிங்காவுக்கு இடம் இல்லை + "||" + Sri Lanka 20 ODI team There is no place for Malinga

இலங்கை 20 ஓவர் போட்டி அணியில் மலிங்காவுக்கு இடம் இல்லை

இலங்கை 20 ஓவர் போட்டி அணியில் மலிங்காவுக்கு இடம் இல்லை
இலங்கை 20 ஓவர் போட்டி அணியில் மலிங்காவுக்கு இடம் இல்லை இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை நடக்கிறது. இதன்பிறகு இந்தியாவுக்கு எதிராக மூன்று 20 ஓவர் போட்டிகளில் இலங்கை அணி விளையாடுகிறது. முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 20-ந்தேதி கட்டாக்கில் நடக்கிறது. 20 ஓவர் தொடருக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. மூத்த வேகப்பந்து வீச்சாளர் 34 வயதான மலிங்காவுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அவர் நீக்கப்படவில்லை; ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்று அணிக்கு ஒப்புதல் அளித்த இலங்கை விளையாட்டுத்துறை மந்திரி தயாஸ்ரீ ஜெயசேகரா கூறியுள்ளார். சுரங்கா லக்மல், திரிமன்னேவுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.


இலங்கை 20 ஓவர் போட்டி அணி வருமாறு:- திசரா பெரேரா (கேப்டன்), தரங்கா, மேத்யூஸ், குசல் பெரேரா, குணதிலகா, டிக்வெல்லா, குணரத்னே, சமரவிக்ரமா, ஷனகா, சதுரங்கா டி சில்வா, பதிரானா, அகிலா தனஞ்ஜெயா, நுவான் பிரதீப், விஷ்வா பெர்னாண்டோ, சமீரா.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டி மழையால் பாதிப்பு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் 16.1 ஓவரில் மழை குறுக்கிட்டதால் நிறுத்தப்பட்டது.
2. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டி டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. #AusvInd