கிரிக்கெட்

‘வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு நான் திரும்புவது சந்தேகம்’ + "||" + West Indies cricket team I doubt its coming back Dwayne Bravo

‘வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு நான் திரும்புவது சந்தேகம்’

‘வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு நான் திரும்புவது சந்தேகம்’
‘வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு நான் திரும்புவது சந்தேகம்’ வெய்ன் பிராவோ சொல்கிறார்.
சார்ஜா,

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான 34 வயது வெய்ன் பிராவோ அளித்த பேட்டியில், ‘சர்வதேச கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணியில் இருந்து நான் நீக்கப்பட்டு இருக்கிறேன். நல்ல உடல் தகுதியுடன் இருந்த போதும் என்னை சேர்க்கவில்லை. எனவே மீண்டும் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு திரும்ப முடியும் என்று நினைக்கவில்லை.

என்னால் எத்தனை ஆண்டு காலம் கிரிக்கெட் விளையாட முடியுமோ? அத்தனை காலம் வரை தொடர்ந்து மற்ற போட்டிகளில் விளையாடுவேன்’ என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் வெய்ன் பிராவோ வெஸ்ட்இண்டீஸ் அணியில் இடம் பிடித்தார். அதன் பிறகு அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.