கிரிக்கெட்

கிரிக்கெட் போட்டியின் போது சுருண்டு விழுந்து உயிரிழந்த வீரர் + "||" + Player collapses on cricket field in local match in Kerala

கிரிக்கெட் போட்டியின் போது சுருண்டு விழுந்து உயிரிழந்த வீரர்

கிரிக்கெட் போட்டியின் போது சுருண்டு விழுந்து  உயிரிழந்த வீரர்
கேரளாவில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய வீரர் ஒருவர், மைதானத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
கொச்சி

கேரள மாநிலத்தில், உள்ளூர் கிரிக்கெட் அணிகளுக்கான கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த கிரிக்கெட் அணிகள் போட்டியில் பங்கேற்று விளையாடினர். இதில் காசர்கோடு மாவட்டம் உப்பாலாவில்  இருந்து வந்திருந்த பத்மநாப்  ஜோடுகல்லு என்ற இளம்வீரர், பந்து வீச்சில் ஈடுபட்ட போது மாரடைப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக அவர், அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். பத்மநாப் மயங்கி விழுந்ததைக் கண்ட மற்ற வீரர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதிகப்படியான வெயிலின் காரணமாக பத்மநாப் மயங்கி விழுந்திருக்கலாம் என்று அங்கிருந்த பயிற்சியாளர்கள் மற்றும் போட்டியின் நடுவர்கள் கருதினர். ஆனால், மருத்துவர்கள் பத்மநாப்பை சோதித்து பார்த்த பின்னர், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். இந்த செய்தியைக் கேட்ட சகவீரர்கள் மற்றும் போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், கிரிக்கெட் போட்டியை வீடியோ எடுக்கும் போது அதில் பத்மநாப் மைதானத்தில் மயங்கி விழும் காட்சிகள் பதிவாகி உள்ளன. கிரிக்கெட் விளையாட்டில் மிகவும் ஆர்வம் கொண்ட பத்மநாப், கிரிக்கெட் விளையாடும் போதே உயிழந்தது மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளதாக அவரின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று கடந்த 2015 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி ஒன்றில் பெங்காலி வீரர் ஒருவர், சக வீரர் ஒருவருடன் மைதானத்தில் மோதிக் கொண்டதில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. 6 பந்தில் 6 சிக்சர் அடித்து சாதனை நிகழ்த்திய கிரிக்கெட் வீரர்
ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரத்துல்லா சசாய் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து சாதனை நிகழ்த்தினார்.
2. நீங்கள் சரியாக விளையாடவில்லை என்றால் அணியில் இருக்க முடியாது : டோனிக்கு காம்பீர் எச்சரிக்கை
டோனி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி தன் மீதான விமர்சனங்களை தோற்கடிப்பார் என்று நம்புவதாக கவுதம் கம்பீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
3. ஐதராபாத் 2-வது டெஸ்ட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்கிறது
4. 20 ஓவர் கிரிக்கெட்டில் சீனாவுக்கு எதிராக 11 பந்துகளில் வெற்றி பெற்ற நேபாளம்
பல்வேறு போட்டிகளில் தங்கத்தை குவிக்கும் சீனா கிரிக்கெட்டில் மட்டும் மண்ணை கவ்வுகிறது. 11 பந்துகளில் பந்தாடியது நேபாளம்.
5. தமிழ்நாட்டு கடற்கரையின் புகைப்படமா? காயமடைந்த மேத்யூ ஹைடனை கிண்டல்டித்த ஜாண்டி ரோட்ஸ்
அலைச்சறுக்கின் போது படுகாயமடைந்த மேத்யூ ஹைடனின் புகைப்படத்தை பார்த்த முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ், அவரை மோசமான விதத்தில் கிண்டல் செய்துள்ளார்.