கிரிக்கெட்

ஆஷஸ் தொடர்: ஒரு இன்னிங்ஸ் மற்றும் 41 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி + "||" + Hazlewood five earns Australia the Urn

ஆஷஸ் தொடர்: ஒரு இன்னிங்ஸ் மற்றும் 41 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி

ஆஷஸ் தொடர்: ஒரு இன்னிங்ஸ் மற்றும் 41 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 41 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
பெர்த்,

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 403 ரன்கள் எடுத்ததை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா, ஸ்டீவன் சுமித் (239 ரன்)  அபாரா இரட்டை சதத்தின் உதவியால், 9 விக்கெட் இழப்புக்கு 662 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. உள்நாட்டில் ஆஸ்திரேலிய அணியின் 3-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

அடுத்து 259 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து தடுமாறியது.  4-வது நாள் முடிவில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 38.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது. டேவிட் மலான் (28 ரன்), ஜானி பேர்ஸ்டோ (14 ரன்) களத்தில் இருந்தனர். 5-வது நாள் ஆட்டம் துவங்கியது, பேர்ஸ்டா மேற்கொண்டு ரன்கள் எதுவும் எடுக்காமல் நடையை கட்டினார். ஓரளவு தாக்குபிடித்த டேவிட் மலான் 54 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த வீரர்கள் வரிசையாய் ஒருவர் பின், ஒருவராக  பெவிலியன் திரும்ப இங்கிலாந்து அணி 72.5 ஓவர்களில் 218 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இதன் மூலம் இங்கிலாந்து அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 41 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. 3-வது டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகனாக ஸ்டீவன் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை மெல்போர்னில் நடைபெறுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. கடைசி ஒரு நாள் போட்டியில் வீழ்ந்தது ஆஸ்திரேலியா: இந்திய அணி தொடரை கைப்பற்றி சாதனை - யுஸ்வேந்திர சாஹல், டோனி கலக்கல்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதோடு தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்தது. பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹலும், பேட்டிங்கில் டோனியும் முத்திரை பதித்தனர்.
2. கனடா பிரதமரும் வாழ்த்தினார்: தமிழர்களுக்கு இங்கிலாந்து பிரதமர் தெரசா மே பொங்கல் வாழ்த்து
தைப்பொங்கல் பண்டிகையை உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இதையொட்டி இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து செய்தி வெளியிட்டு பேசினார்.
3. ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் போட்டி: இந்தியா வரலாற்று வெற்றி தொடரை கைப்பற்றியது
ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் போட்டி தொடர் மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்திய அணி சாதனை புரிந்து உள்ளது.
4. மெல்போர்ன் கிரிக்கெட்: இந்தியாவுக்கு 231 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா
மெல்போர்னில் நடைபெற்று வரும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 231 ரன்களை ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்துள்ளது.
5. இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி - சிட்னியில் இன்று நடக்கிறது
இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடக்கிறது.