கிரிக்கெட்

ரஞ்சி கிரிக்கெட்டில் பெங்காலுக்கு எதிரான அரைஇறுதி ஆட்டம்: டெல்லி அணி இன்னிங்ஸ் வெற்றி + "||" + The semi-final against Bengal in Ranji Cricket: Delhi team innings win

ரஞ்சி கிரிக்கெட்டில் பெங்காலுக்கு எதிரான அரைஇறுதி ஆட்டம்: டெல்லி அணி இன்னிங்ஸ் வெற்றி

ரஞ்சி கிரிக்கெட்டில் பெங்காலுக்கு எதிரான அரைஇறுதி ஆட்டம்: டெல்லி அணி இன்னிங்ஸ் வெற்றி
ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் பெங்காலுக்கு எதிரான அரைஇறுதியில் டெல்லி அணி இன்னிங்ஸ் மற்றும் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

புனே,

ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் பெங்காலுக்கு எதிரான அரைஇறுதியில் டெல்லி அணி இன்னிங்ஸ் மற்றும் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

அரைஇறுதி ஆட்டம்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் பெங்கால்–டெல்லி அணிகள் இடையிலான அரைஇறுதி ஆட்டம் புனேயில் நடந்தது. இதில் முதலில் ஆடிய பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 286 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது. இதனை அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய டெல்லி அணி 2–வது நாள் ஆட்டம் முடிவில் 77.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்து இருந்தது. நிதிஷ் ராணா 11 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

நேற்று 3–வது நாள் ஆட்டம் நடந்தது. நிதிஷ் ராணா, ஹிம்மாத் சிங்குடன் இணைந்து ஆட்டத்தை தொடர்ந்தார். முகமது ‌ஷமியின் அபார பந்து வீச்சில் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. நிதிஷ் ராணா 13 ரன்னிலும், அடுத்து களம் கண்ட ரிஷாப் பான்ட் 1 ரன்னிலும், மனன் ‌ஷர்மா 34 ரன்னிலும், நிலைத்து நின்று ஆடிய ஹிம்மாத் சிங் 60 ரன்னிலும், சைனி ரன் எதுவும் எடுக்காமலும், விகாஸ் டாகாஸ் 10 ரன்னிலும், கெஜ்ரோலியா 10 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

டெல்லி அணி அபார வெற்றி

டெல்லி அணி முதல் இன்னிங்சில் 117 ஓவர்களில் 398 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக கம்பீர் 127 ரன்னும், சன்டிலா 113 ரன்னும் எடுத்தனர். பெங்கால் அணி தரப்பில் முகமது ‌ஷமி 6 விக்கெட்டும், அசோக் திண்டா, அமித் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

112 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை ஆடிய பெங்கால் அணியினர், டெல்லி வீரர்களின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மள, மள வென்று விக்கெட்டை இழந்து வெளியேறினார்கள். 24.4 ஓவர்களில் பெங்கால் அணி 86 ரன்னில் சுருண்டது. இதனால் டெல்லி அணி இன்னிங்ஸ் மற்றும் 26 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதிகபட்சமாக சட்டர்ஜி 21 ரன்கள் எடுத்தார். டெல்லி அணி தரப்பில் சைனி, கெஜ்ரோலியா தலா 4 விக்கெட்டும், விகாஸ் டாகாஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 2007–08–ம் ஆண்டுக்கு பிறகு டெல்லி அணி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

கருண்நாயர் 153 ரன்கள்

கொல்கத்தாவில் நடைபெறும் மற்றொரு அரைஇறுதி ஆட்டத்தில் கர்நாடகா–விதர்பா அணிகள் மோதுகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணி முதல் இன்னிங்சில் 185 ரன்னில் ஆல்–அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய கர்நாடகா அணி 2–வது நாள் ஆட்டம் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்து இருந்தது. கருண்நாயர் 148 ரன்னுடனும், கேப்டன் வினய்குமார் 20 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

3–வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய வினய்குமார் 21 ரன்னிலும், கருண்நாயர் 153 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். கர்நாடக அணி முதல் இன்னிங்சில் 100.5 ஓவர்களில் 301 ரன்னில் ஆல்–அவுட் ஆனது. விதர்பா அணி தரப்பில் குர்பானி 5 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 4 விக்கெட்டும், சர்வாதே ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

4–வது நாள்...

116 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை ஆடிய விதர்பா அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 47 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. கணேஷ் சதீஷ் 71 ரன்னுடனும், வாத்கர் 19 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 4–வது நாள் ஆட்டம் நடக்கிறது.தொடர்புடைய செய்திகள்

1. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது? - கவுதம் கம்பீர் பதில்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது என்ற கேள்விக்கு இந்திய மூத்த வீரர் கம்பீர் பதில் அளித்தார்.
2. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: மும்பை, டெல்லி அணிகள் அரைஇறுதிக்கு முன்னேற்றம் கம்பீர் சதம் அடித்தார்
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் மும்பை, டெல்லி அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறியது. மூத்த வீரர் கம்பீர் சதம் விளாசினார்.
3. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: மும்பை–பீகார் அணிகள் கால்இறுதியில் இன்று மோதல்
விஜய்ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
4. பேட் செய்யாமலேயே இரண்டு ‘டிக்ளேர்’ நியூசிலாந்து உள்ளூர் கிரிக்கெட்டில் ருசிகரம்
நியூசிலாந்தில் நடந்த உள்ளூர் முதல் தர கிரிக்கெட் போட்டி ஒன்றில் சென்டிரல் டிஸ்ட்ரிக்ஸ்–கேன்டர்பரி அணிகள் மோதின.
5. ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி மீண்டும் வெற்றி
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.