கிரிக்கெட்

முதல் 20 ஓவர் கிரிக்கெட்: இலங்கை அணிக்கு 181 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது இந்தியா + "||" + Pandey, Dhoni push India to 180

முதல் 20 ஓவர் கிரிக்கெட்: இலங்கை அணிக்கு 181 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது இந்தியா

முதல் 20 ஓவர் கிரிக்கெட்: இலங்கை அணிக்கு 181 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது இந்தியா
கட்டாக்கில் நடைபெற்று வரும் முதல் 20-ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, இலங்கை அணிக்கு 181 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்துள்ளது.
கட்டாக்,

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 0–1 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 1–2 என்ற கணக்கிலும் பறிகொடுத்த இலங்கை அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. 

இதன்படி இந்தியா–இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. இதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் துவக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும் லோகேஷ் ராகுல் களம் இறங்கினர். 

ரோகித் சர்மா 17 ரன்களில் வெளியேறினாலும் லோகேஷ் ராகுல் பட்டையை கிளப்பினார். அதிரடியாக விளையாடி லோகேஷ் ராகுல் 48 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.  இதையடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 24 ரன்களில் வெளியேற, டோனியும் மனிஷ் பாண்டேவும் இறுதி கட்டத்தில் அதிரடியாக விளையாடினர்.  இந்திய அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் சேர்த்தது. டோனி 39 ரன்களுடனும் (22 பந்துகள்) மனிஷ் பாண்டே 32 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணி இலங்கை அணிக்கு 181 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. இரானி கோப்பை கிரிக்கெட்: ரெஸ்ட் ஆப் இந்தியா 374 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ விஹாரி மீண்டும் சதம் அடித்து சாதனை
நடப்பு ரஞ்சி சாம்பியன் விதர்பா– ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது.
2. இந்தியாவில் சைபர் மோசடி வழக்குகள் அதிகரிப்பு - மத்திய அரசு
இந்தியாவில் சைபர் மோசடி வழக்குகள் அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
3. உரி பகுதியில் சந்தேக நபர்கள் நடமாட்டம்: பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு
உரி பகுதியில் சந்தேக நபர்கள் நடமாட்டம் தென்பட்டதை அடுத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
4. தேசிய கொடிக்கு டோனி அளித்த மரியாதை: சமூக வலைதளங்களில் வைரலாகும் காட்சிகள்
தேசியக்கொடிக்கு டோனி உரிய மரியாதை அளித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
5. கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு 213 ரன்கள் வெற்றி இலக்கு
கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து இந்தியாவுக்கு 213 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை